ta_tw/bible/names/zerubbabel.md

2.7 KiB

செருபாபேல்

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் செருபாபேல் என்னும் பெயரையுடைய இரண்டு இஸ்ரவேலர்கள் இருந்தனர்.

  • இவர்களில் ஒருவன், யோயாக்கீம் மற்றும் சிதேக்கியாவின் சந்ததி ஆவான்.
  • செயல்த்தியேலின் மகனாகிய செருபாபேல் என்னும் இன்னொருவன், எஸ்றா மற்றும் நெகேமியாவின் நாட்களில் பாபிலோனின் சிறையிருப்பிலிருந்து இஸ்ரவேல் மக்களை பெர்சியாவின் இராஜாவாகிய கோரேஸ் விடுதலை செய்தபோது, யூதா கோத்திரத்திற்கு தலைவனாக இருந்தான்.
  • செருபாபேலும் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவும், தேவாலயத்தையும், தேவனுடைய பலிபீடத்தையும் மீண்டும் கட்டுவதற்கு உதவி செய்த மனிதர்களுள் இவர்களும் ஒருவராவர்.

(மொழிப்பெயர்ப்பு சிபாரிசிகள்: பெயர்களை எப்படி மொழிப்பெயர்ப்பது

(மேலும் பார்க்க: பாபிலோன், சிறையிருப்பு, கோரேசு, எஸ்றா, பிரதான ஆசாரியன், யோயாக்கீம், யோசுவா, யூதா, நெகேமியா, பெர்சியா, சிதேக்கியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H2216, H2217, G2216