ta_tw/bible/names/persia.md

2.8 KiB

பெர்சியா, பாரசீகர்கள்

வரையறை:

பெர்சியா பேரரசு 550 கி.மு. இல் மகா கோரேசுவால் நிறுவப்பட்டது . அது ஒரு சக்தி வாய்ந்த பேரரசு ஆனது. பெர்சியா, பாபிலோனியா மற்றும் அசீரியாவின் தென்கிழக்கு பகுதியில் தற்போது இன்றைய ஈரானின் நாட்டில் உள்ளது.

  • பெர்சியா மக்கள் "பாரசீகர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.
  • கோரேசுவின் ஆட்சியின் கீழ், யூதர்கள் பாபிலோனில் சிறையிருப்பிலிருந்து விடுவிக்கப்பட்டனர், வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்கள், பெர்சிய சாம்ராஜ்யத்தால் வழங்கப்பட்ட நிதிகளுடன் எருசலேமிலுள்ள ஆலயம் மீண்டும் கட்டப்பட்டது.
  • எஸ்றாவும் நெகேமியாவும் திரும்பி வந்தபோது எருசலேமின் சுவர்களை கட்டிய காலத்தில், ​​பாரசீக சாம்ராஜ்யத்தின் ஆட்சியாளராக இருந்த அர்தசஷ்டா அரசராக இருந்தார்.
  • எஸ்தர் ராஜாவாகிய அகாஸ்வேருவை மணந்துகொண்டபோது பாரசீக சாம்ராஜ்யத்தின் ராணி ஆனார்.

(மேலும் காண்க: அகாஸ்வேரு, அர்தசஷ்டா, அசீரியா , பாபிலோன், கோரேசு, எஸ்தர், எஸ்றா, நெகேமியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6539, H6540, H6542, H6543