ta_tw/bible/names/cyrus.md

2.3 KiB

கோரேசு

உண்மைகள்:

கோரேசு பெர்சிய மன்னராக இருந்தார், இவர் பெர்சிய பேரரசை கி.மு 550 இல் இராணுவ வெற்றியாகக் கொண்டு நிறுவினார். வரலாற்றில் அவர் மாபெரும் கோரேசு என்றும் அழைக்கப்படுகிறார்.

  • கோரேசு பாபிலோன் நகரத்தை கைப்பற்றினார், அங்கு சிறைபிடிக்கப்பட்டிருந்த இஸ்ரவேலரை விடுவிக்க வழிவகுத்தது.
  • அவர் வெற்றிபெற்ற தேசங்களின் மக்களைப் பொறுத்தவரை கோரேசு தன்னுடைய சகிப்புத்தன்மையைக் காட்டுகிறார். யூதர்கள்மீது அவர் காட்டும் தயவு சிறைபிடிக்கப்பட்ட பிறகு எருசலேம் ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு வழிநடத்தியது.
  • தானியேல், எஸ்றா, நெகேமியா ஆகியோர் வாழ்ந்த காலத்தில் கோரேசு ஆட்சி செய்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: தானியேல், தரியு, எஸ்றா, நெகேமியா, பெர்சியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3566