ta_tw/bible/names/daniel.md

3.5 KiB

தானியேல்

உண்மைகள்:

தானியேல் ஓர் இஸ்ரவேல் தீர்க்கதரிசியாக இருந்தார். கி.மு 600 ல் பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சாரால் இளம்வயதில் சிறைபிடிக்கப்பட்டார்.

  • யூதாவிலிருந்து பல இஸ்ரவேலர் 70 வருடங்களாக பாபிலோனில் சிறைப்பிடிக்கப்பட்ட காலத்தில் இது நடந்தது.
  • தானியேலுக்கு பாபிலோனிய பெயரான பெல்தெஷாத்சார் என்ற பெயர் கொடுக்கப்பட்டது.

தானியேல் தேவனுக்குக் கீழ்ப்படிந்த ஒரு மதிப்புமிக்க, நீதியுள்ள இளைஞராக இருந்தார்.

  • பாபிலோனிய ராஜாக்களுக்கு பல கனவுகள் அல்லது தரிசனங்களை விளக்குவதற்கு தானியேலை தேவன் பயன்படுத்தினார்.
  • இந்த திறமையின் காரணமாகவும், கௌரவமிக்க குணாதிசயத்தின் காரணமாக தானியேல் பாபிலோனிய சாம்ராஜ்யத்தில் உயர்ந்த தலைமைப் பதவிக்கு வந்தார்.
  • பல ஆண்டுகளுக்குப் பிறகு, தானியேலின் எதிரிகள் ராஜாவைத் தவிர வேறெவரையும் வணங்கக்கூடாது என்ற சட்டத்தை இயற்றும்படிம்படி செய்து பாபிலோனிய மன்னனான தரியுவை வஞ்சகமாக ஏமாற்றினர். தானியேல் தேவனிடம் தொடர்ந்து ஜெபம் செய்தார், எனவே அவர் கைது செய்யப்பட்டு சிங்கங்களின் குகையில் அவரைப் போட்டனர். ஆனால் தேவன் அவரைக் காப்பாற்றினார் மற்றும் அவர் பாதிக்கப்படவில்லை.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பாபிலோன், நேபுகாத்நேச்சார்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H1840, H1841, G1158