ta_tw/bible/names/nebuchadnezzar.md

5.8 KiB

நேபுகாத்நேச்சார்

உண்மைகள்:

நேபுகாத்நேச்சார் பாபிலோனிய சாம்ராஜ்யத்தின் மன்னனாக இருந்தார், அதன் சக்திவாய்ந்த இராணுவம் பல மக்களையும் குழுக்களையும் வெற்றி பெற்றது.

நேபுகாத்நேச்சார் தலைமையில், பாபிலோனிய இராணுவம் யூதா ராஜ்யத்தை தாக்கி, வென்றது, யூதாவின் பெரும்பகுதியை பாபிலோனுக்கு சிறைபிடித்துச் சென்றது. சிறைபிடிக்கப்பட்டவர்கள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு "பாபிலோனிய சிறைஇருப்பிலுள்ளவர்கள்" என அழைக்கப்படுகின்றனர்.

  • நாடுகடத்தப்பட்டவர்களில் ஒருவரான தானியேல், நேபுகாத்நேச்சார் ராஜாவின் சில கனவுகளை விளக்கினார்.
  • நேபுகாத்நேச்சார் செய்த மிகப்பெரிய தங்கச் சிலைக்கு வணங்க மறுத்தபோது, ​​மற்ற மூன்று இஸ்ரவேலர், அனனியா, மிசாவேல், அசரியா, ஒரு எரியும் சூளைக்குள் தள்ளப்பட்டனர்.
  • நேபுகாத்நேச்சார் ராஜா மிகவும் திமிர்த்தனமாக இருந்தார், பொய்க் கடவுட்களை வணங்கினார். அவர் யூதாவை வெற்றி கொண்டபோது, ​​எருசலேமிலிருந்த ஆலயத்திலிருந்து பல பொன்னையும் வெள்ளியையும் அவர் திருடினார்.
  • ஏனென்றால், நேபுகாத்நேச்சார் பெருமைப்பட்டு, பொய்க் கடவுட்களை வணங்குவதை விட்டு விலகிவிட மறுத்ததால், ஏழு வருடங்கள் ஆண்டவர் அவரை மிருகத்தைப்போல வாழச்செய்தார். ஏழு வருஷம் கழித்து, நேபுகாத்நேச்சார் தன்னைத் தாழ்த்தி, ஒரு உண்மையான கடவுளாகிய யெகோவாவை புகழ்ந்தபோதே தேவன் திரும்பினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: திமிர்பிடித்த, அசரியா, பாபிலோன், அனனியா, மிசாவேல்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 20:6 அசீரியர்கள் இஸ்ரவேலின் ராஜ்யத்தை அழித்த சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் பாபிலோனிய மன்னனான __நேபுகாத்நேச்சாரை யூதாவின் ராஜ்யத்தைத் தாக்க அனுப்பினார்.
  • 20:6 யூதாவின் ராஜா __நேபுகாத்நேச்சாருடைய ஊழியனாக இருக்க ஒப்புக்கொண்டார், ஒவ்வொரு ஆண்டும் அவருக்கு நிறைய பணம் கொடுக்கும்படி ஒப்புக்கொண்டான்.
  • 20:8 கலகம் செய்ததற்காக யூதாவின் ராஜாவை தண்டிப்பதற்காக, __நேபுகாத்நேச்சாரின் படைவீரர்கள் அரசரின்கண்ணெதிரே மகன்களை கொன்ற பின் அவரை குருடனாக ஆக்கினார்கள்.
  • 20:9 நேபுகாத்நேச்சார் மற்றும் அவரது படை பாபிலோன் யூதா ராஜ்யத்தின் கிட்டத்தட்ட அனைத்து மக்களை சிறைபிடித்து, ஏழை மக்களை மட்டுமே விட்டுசென்றனர்.

சொல் தரவு:

  • Strong's: H5019, H5020