ta_tw/bible/names/babylon.md

6.6 KiB

பாபிலோன், பாபிலோனியா, பாபிலோனைச் சேர்ந்தவன், பாபிலோனியர்கள்

உண்மைகள்:

பாபிலோன் நகரம் பாபிலோனிய பண்டைய பிராந்தியத்தின் தலைநகரமாக இருந்தது, அது பாபிலோனிய பேரரசின் ஒரு பகுதியாகவும் இருந்தது.

  • பாபிலோன், நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பாபேல் கோபுரம் கட்டப்பட்ட அதே பகுதியில், யூப்ரடீஸ் ஆற்றின் அருகே அமைந்துள்ளது.
  • சில நேரங்களில் "பாபிலோன்" என்ற வார்த்தை முழு பாபிலோனிய சாம்ராஜ்யத்தை குறிக்கிறது. உதாரணமாக, "பாபிலோன் ராஜா" நகரத்தை மட்டுமல்லாமல், முழு சாம்ராஜ்யத்தையும் ஆட்சி செய்தார்.
  • பாபிலோனியர்கள் மிகவும் வலிமைவாய்ந்த மக்களாக இருந்து, யூதா ராஜ்யத்தைத் தாக்கி, அவர்களை 70 ஆண்டுகள்பாபிலோனியாவிற்கு சிறையாக நாடு கடத்தினர்.
  • இந்த பிராந்தியத்தின் ஒரு பகுதி "கல்தேயா" என்று அழைக்கப்பட்டது, அங்கே வாழும் மக்கள் "கல்தேயர்கள்" என அழைக்கப்பட்டார்கள். இதன் விளைவாக, "கல்தேயா" என்பது பாபிலோனியாவை குறிக்க பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. (பார்க்கவும்: சினையாகுபெயர்
  • புதிய ஏற்பாட்டில், "பாபிலோன்" என்ற வார்த்தை சில நேரங்களில் சிலை வழிபாடு மற்றும் பிற பாவ குணங்களுடன் தொடர்புடைய இடங்கள், மக்கள் மற்றும் சிந்தனை முறைகளை குறிக்க ஒரு உருவகமாக பயன்படுத்தப்படுகிறது.
  • "மகா பாபிலோன்" அல்லது "பாபிலோன் என்னும் பெரிய நகரம்" என்ற சொற்றொடர், பண்டைய நகரமாகிய பாபிலோன் போலவே பெரிய, பணக்காரர், பாவம் நிறைந்த நகரம் அல்லது தேசத்திற்கு உருவகமாக குறிக்கப்படுகிறது. (பார்க்கவும்: உருவகம்

(மேலும் காண்க: பாபேல், கல்தேயா, யூதா, நேபுகாத்நேச்சார்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 20:6 அசீரியர்கள் இஸ்ரவேலின் இராஜ்ஜியத்தை அழித்ததற்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு பிறகு, தேவன் யூதா ராஜ்யத்தை தாக்க, பாபிலோனியர்களின் ராஜாவாகிய, நேபுகாத்நேச்சாரைஅனுப்பினார். பாபிலோன் ஒரு சக்தி வாய்ந்த பேரரசாக இருந்தது.
  • 20:7 ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு, யூதாவின் ராஜா Babylon க்கு எதிராக கலகம் செய்தார். எனவே, பாபிலோனியர்கள் திரும்பி வந்து யூதா ராஜ்யத்தை தாக்கினார்கள். அவர்கள் எருசலேம் நகரத்தைக் கைப்பற்றி, தேவாலயத்தை அழித்து நகரம் மற்றும் தேவாலயத்திலுள்ள அனைத்து பொக்கிஷங்களையும் எடுத்துகொண்டார்கள்.
  • __20:9__நேபுகாத்நேச்சாரும் அவருடைய படைகளும் கிட்டத்தட்ட யூதாவின் ராஜ்யத்தாரை பாபிலோனுக்கு அழைத்துச் சென்றனர். மேலும் விலைநிலங்களை பராமரிக்க ஏழையான மக்களை மட்டும் விட்டுச் சென்றான்.
  • 20:11 எழுபது வருடங்கள் கழித்து, பெர்சிய அரசரான கோரேசு, பாபிலோனைத் தோற்கடித்தார்.

சொல் தரவு:

  • Strong's: H3778, H3779, H8152, H894, H895, H896, G897