ta_tw/bible/names/babel.md

2.8 KiB

பாபேல்

உண்மைகள்:

பாபேல் மெசொப்பொத்தோமியாவின் தெற்கு பகுதியில் சிநேயார் என்ற பகுதியில் உள்ள ஒரு முக்கிய நகரமாக இருந்தது. சிநேயார் பின்னர் பாபிலோனியா என்று அழைக்கப்பட்டது.

  • பாபேல் நகரம் காமின் கொள்ளுப் பேரனான நிம்ரோத்தால் நிறுவப்பட்டது, இவர் சிநேயாரை ஆட்சிசெய்தான்.
  • சிநேயாரைச் சேர்ந்தவர்கள் பெருமை அடைந்து பரலோகத்தை எட்டும்அளவிற்கு ஒரு கோபுரத்தை கட்டியெழுப்ப முடிவெடுத்தனர். இது பின்னர் "பாபேல் கோபுரம்" என்று அழைக்கப்பட்டது.
  • பரவிச் செல்லவேண்டும் என்ற தேவனுடைய கட்டளையை கோபுரத்தை கட்டும் மக்கள் நிறைவேற்ற மறுத்துவிட்டதால், அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாதபடி தங்கள் மொழிகளை தாறுமாறாக்கினார். இது பூமியில் உள்ள பல்வேறு இடங்களுக்குச் சென்று வாழும்படி அவர்களைத் தூண்டியது.
  • "பாபேல்" என்ற வார்த்தையின் மூல அர்த்தம் "குழப்பம்” ஆகும். இது தேவன் மக்களுடைய மொழியைத் தாறுமாறாக்கும்போது இவ்வாறு பெயரிடப்பட்டது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: பாபிலோன், காம், மெசொப்பொத்தோமியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H894