ta_tw/bible/names/azariah.md

3.0 KiB

அசரியா

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில் அசரியா என்ற பெயரில் பல ஆண்கள் இருந்தனர்.

  • ஒரு அசரியா அதாவது பாபிலோனியப் பெயரான ஆபேத்நேகோவால் ஒரு நன்கு அறியப்பட்டவர். யூதாவிலிருந்து நேபுகாத்நேச்சாரின் சேனைகளால் சிறையாகக்கொண்டு செல்லப்பட்ட பல இஸ்ரவேலரில் இவரும் ஒருவராக இருந்தார்; அசரியாவும் அவரது சக இஸ்ரவேலரான அனனியாவும் மிஷாவேலும் பாபிலோன் அரசனை வணங்க மறுத்துவிட்டனர், எனவே அவர்களைத் தண்டனையாக அக்கினிச் சூளையில் எரித்தனர். ஆனால் தேவன் அவர்களை பாதுகாத்தார் மற்றும் அவர்களுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.
  • யூதாவின் ராஜாவாகிய உசியா "அசரியா" என்றும் அழைக்கப்படுகிறார்.
  • இன்னொரு அசரியா பழைய ஏற்பாட்டின் பிரதானஆசாரியனாவான்.
  • தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் காலத்தில், அசரியா என்னும் பெயருள்ள ஒருவன், இஸ்ரவேலரை தேசத்தை விட்டு விலகி தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி தவறாக உந்துவித்தார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை மொழிபெயர்த்தல்

(மேலும் காண்க: பாபிலோன், தானியேல், அனனியா, மிஷாவேல், எரேமியா, உசியா)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H5838