ta_tw/bible/names/uzziah.md

3.1 KiB

உசியா, அசரியா

உண்மைகள்:

உசியா தனது 16வது வயதில் யூதாவின் இராஜாவாகி, வழக்கம்போல் அல்லாமல் நீண்ட நாட்களாகிய 52 வருடங்கள் ஆட்சி செய்தான். உசியா “அசரியா” என்றும் அழைக்கப்பட்டான்.

  • உசியா இராஜா தனது ஒழுங்குபடுத்தப்பட்ட மற்றும் திறமைவாய்ந்த இராணுவத்திற்குப் புகழ்பெற்றவனாக இருந்தான். அவன் நகரத்தைப் பாதுகாப்பதற்காக உயர்ந்த கோபுரங்களைக் கட்டி, பெரிய கற்களையும், அம்புகளையும் சுழற்றி எறிவதற்காக வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட போர் ஆயுதங்களை உருவாக்கி அவைகளை அக்கோபுரங்கள் மீது அமைத்தான்.
  • உசியா கர்த்தரை சேவித்த நாட்களெல்லாம் செழிப்படைந்தான். அவன் தனது அரசாட்சியின் இறுதியில், பெருமையுள்ளவனாகி, தேவாலயத்தில் ஆசாரியர்கள் மட்டுமே செய்யவேண்டிய காரியமாகிய தூபம்காட்டுதலைச் செய்து கீழ்படியாதவனானான்.
  • இந்தப் பாவத்தினால், உசியா குஷ்டரோகியாகி, அவனுடைய அரசாட்சியின் முடிவுவரை மற்ற மக்களிடமிருந்து விலகி தனியாகக் குடியிருந்தான்.

(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்ப்பது

(மேலும் பார்க்க: யூதா, இராஜா, குஷ்டரோகம், அரசாட்சி, காவற்கோபுரங்கள்)

வேதாகமக் குறிப்புக்கள்:

சொல் தரவு:

  • Strong's: H5814, H5818, H5838, H5839