ta_tw/bible/other/king.md

6.2 KiB

ராஜா, அரசர்கள், ராஜ்யம், ராஜ்யங்கள், அரசாட்சி, அரசர்

வரையறை:

"ராஜா" என்ற வார்த்தை, ஒரு நகரத்தின், மாநில அல்லது நாட்டின் உச்ச நிர்வாகியாக இருக்கும் ஒருவரை குறிக்கிறது.

  • ஒரு மன்னர் வழக்கமாக ஆட்சி செய்யத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்; ஏனெனில் அவரது குடும்ப அங்கத்தினர் ஏற்கனவே இராஜாவாக இருந்திருக்கிறார்.
  • ஒரு ராஜா இறந்துவிட்டால், அது வழக்கமாக அவரது மூத்த மகன் அடுத்த அரசனாக ஆவான்.
  • பூர்வ காலங்களில், ராஜா தனது ராஜ்யத்தில் மக்கள் மீது முழுமையான அதிகாரம் இருந்தது.
  • புதிய ஏற்பாட்டில் "ராஜாவாகிய ஏரோது" போன்ற ஒரு உண்மையான ராஜா இல்லாத ஒருவரையே குறிப்பிடுவதற்கு "ராஜா" என்ற வார்த்தை அரிது.
  • வேதாகமத்தில், தேவன் தம் மக்களை ஆளுகிற அரசராக அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்.
  • "தேவனுடைய ராஜ்யம்" அவருடைய மக்கள் மீதுள்ள தேவனுடைய ஆட்சியை குறிக்கிறது.
  • இயேசு "யூதர்களின் ராஜா", "இஸ்ரவேலின் ராஜா", "ராஜாதி ராஜா" என்று அழைக்கப்பட்டார்.
  • இயேசு திரும்பி வரும்போது அவர் உலகம் முழுவதிலும் அரசராக ஆட்சி செய்வார்.
  • இந்த வார்த்தை "உச்ச தலைமை" அல்லது "முழுமையான தலைவர்" அல்லது "இறையாண்மை ஆட்சியாளர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "ராஜாக்களின் ராஜா" என்ற சொற்றொடரை "மற்ற எல்லா ராஜாக்களுக்கும் ஆளுகை செய்யும் ராஜா" அல்லது "மற்ற எல்லா ஆட்சியாளர்களுக்கும் அதிகாரத்தை உடையவராயிருக்கும் உயர்ந்த ஆட்சியாளர்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: அதிகாரம், ஏரோது அந்திப்பா, இராச்சியம், தேவனின் இராச்சியம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 8:6 ஒருநாள் இரவு, எகிப்தியர்களால் தங்கள் அரசர்களை அழைத்த வார்த்தையான பார்வோன், , அவருக்கு இரண்டு கனவுகள்தோன்றின, அவைகள் அவனுடைய சிந்தனையை கலங்கச் செய்தன.
  • 16:1 இஸ்ரவேலர்களுக்கு ராஜா இல்லை, எனவே எல்லோரும் அவரவர்மனதின்படி செய்தார்கள்.
  • 16:18 இறுதியாக, மற்ற எல்லா நாடுகளையும் போலவே, மக்கள் ராஜா வேண்டும் என்று தேவனிடம் கேட்டார்கள்.
  • 17:5 இறுதியில் சவுல் போரில் இறந்துவிட்டார். தாவீது இஸ்ரவேலின் இராஜாவாக ஆனான். அவர் ஒரு நல்ல இராஜா, மற்றும் மக்கள் அவரை நேசித்தார்கள்.
  • 21:6 தேவனுடைய தீர்க்கதரிசிகள் மேசியா ஒரு தீர்க்கதரிசி, ஒருஆசாரியன்,, மற்றும் ஒரு இராஜா என்று சொன்னார்கள்.
  • 48:14 தாவீது இஸ்ரவேலின் இராஜா, ஆனால் இயேசு முழு பிரபஞ்சத்தின் இராஜாவாக இருக்கிறார்!

சொல் தரவு:

  • Strong's: H4427, H4428, H4430, G935, G936