ta_tw/bible/names/herodantipas.md

3.0 KiB

ஏரோது, ஏரோது அந்திப்பா

உண்மைகள்:

இயேசுவின் வாழ்நாள் முழுவதிலும், கலிலேயா மாகாணத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் பகுதியாக இருந்த ஏரோது அந்திப்பா ஆவார்.

  • மகா ஏரோதுவைப் போலவே அவருடைய மகனான அந்திப்பா, அவர் உண்மையிலேயே ஒரு ராஜாவாக இல்லாவிட்டாலும், "ராஜாவாகிய ஏரோது" என அழைக்கப்படுகிறார்.
  • ரோம சாம்ராஜ்ஜியத்தில் நான்கில் ஒரு பகுதியை ஆண்ட ஏரோது அந்திப்பா ஆட்சி செய்தார், எனவே அவர் "தேசாதிபதியாகிய ஏரோது" என்றும் அழைக்கப்படுகிறார்.
  • யோவான் ஸ்நானகன் தலை துண்டித்துக் கொல்லப்படவேண்டும் என்ற உத்தரவைக் கொடுத்தவன் இந்த அந்திப்பா "ஏரோது" ஆவான்.
  • அவருடைய சிலுவை மரணத்திற்கு முன்பாக இயேசுவை விசாரணை செய்தவன் இந்த அந்திப்பா ஆவான்.
  • புதிய ஏற்பாட்டில் பிற ஏரோதுக்கள் அப்போஸ்தலர்கள் காலத்தில் அந்திப்பாவின் மகன் (அகிரிப்பா) மற்றும் பேரன் (அகிரிப்பா 2) ஆவர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்க: சிலுவையில் அறையப்படுதல், மகா ஏரோது, யோவான்(ஸ்நானகன்), ராஜா, ரோம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2264, G2265, G2267