ta_tw/bible/names/johnthebaptist.md

5.4 KiB
Raw Permalink Blame History

யோவான் (ஸ்நானகன்)

உண்மைகள்:

யோவான் சகரியா மற்றும் எலிசபெத்தின் மகன். " யோவான் " என்பது ஒரு பொதுவான பெயர் என்பதால், அவர் "யோவான் ஸ்நானகன்" என்று அழைக்கப்படுகிறார், அப்போஸ்தலனாகிய யோவான் போன்ற பிற மக்களிடமிருந்து அவரை வேறுபடுத்தி அறியலாம்.

  • யோவான் நம்பிக்கைவைக்கவும் மற்றும் மேசியாவைப்பின்பற்றவும் மக்களை தயார் செய்ய தேவன் அனுப்பிய தீர்க்கதரிசியாக இருந்தார்.
  • யோவான், தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, தேவனிடம் திரும்பி, அவர்கள் மேசியாவை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என்று மக்களிடம் சொன்னார்.
  • யோவான் தண்ணீரில் பலரை ஞானஸ்நானம் செய்தார், அவர்கள் தங்கள் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு, அவைகளிடமிருந்து விலகிவிட்டார்கள்.
  • யோவான் பல பேருக்கு ஞானஸ்நானம் கொடுத்தபடியால் " யோவான் ஸ்நானகன்" என்று அழைக்கப்பட்டார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஞானஸ்நானம், சகரியா

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • __22:2__தேவதூதன் சகரியாவை நோக்கி, "உனது மனைவிக்கு ஒரு மகன் பிறப்பான். நீங்கள் அவனுக்கு __ யோவான் __ என்று பெயரிடுவீர்கள். அவர் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு, மக்களை மேசியாவை சந்திக்க ஆயத்தம் செய்வார்! "
  • 22:7 எலிசபெத் தன் குழந்தையை பெற்றெடுத்த பிறகு, சகரியா மற்றும் எலிசபெத் தேவதூதன் கட்டளையிட்டபடி குழந்தைக்கு __ யோவான் __ என்று பெயரிட்டார்.
  • 24:1 யோவான் __, சகரியா மற்றும் எலிசபெத்தின் மகன், வளர்ந்தார் மற்றும் ஒரு தீர்க்கதரிசி ஆனார். அவர் வனாந்தரத்தில் வாழ்ந்து, காட்டு தேனையும் வெட்டுக்கிளிகளையும் சாப்பிட்டார், ஒட்டகத்தின் முடியால்ஆன ஆடைகளை அணிந்திருந்தார்.
  • __24:2__அநேகர் வனாந்தரத்திற்கு வந்து, __ யோவான் _சொல்வதைக் கேட்டனர். அவர் அவர்களை நோக்கி: மனந்திரும்புங்கள், தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிருக்கிறது என்று பிரசங்கித்தான்.
  • 24:6 அடுத்த நாள், இயேசு __ யோவான் __ மூலமாக ஞானஸ்நானம் பெற்றார். __ யோவான் அவரை பார்த்தபோது, "பாருங்கள்! தேவனுடைய ஆட்டுக்குட்டியானவர் உலகத்தின் பாவத்தை நீக்கிவிடுவார். "

சொல் தரவு:

  • Strong's: G910 G2491