ta_tw/bible/names/zechariahnt.md

3.7 KiB

சகரியா (புதிய ஏற்பாடு)

உண்மைகள்:

புதிய ஏற்பாட்டில், யோவான் ஸ்நானகனுக்கு தகப்பனாகிய சகரியா யூத ஆசாரியனாக இருந்தான்.

  • சகரியா தேவனை நேசித்து அவருக்குக் கீழ்ப்படிந்தான்.
  • சகரியாவும் அவனுடைய மனைவியாகிய எலிசபெத்தும் அநேக வருடங்களாக ஒரு குழந்தையைப் பெறுவதற்காக ஊக்கமாக ஜெபித்தார்கள். ஆனால் அவர்களுக்கு ஒரு குழந்தைகூட இல்லை. பின்புஅவர்கள் வயதானபோது, தேவன் அவர்களுடைய ஜெபத்திற்குப் பதில்கொடுத்து, அவர்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தார்.
  • சகரியா, தன் மகனாகிய யோவான், மேசியாவிற்கு வழியை ஆயத்தப்படுத்தி, அறிவிக்கிற தீர்க்கதரிசியாக இருப்பான் என்று தீர்க்கதரிசனம் உரைத்தான்.

(மொழிபெயர்ப்பு ஆலோசனைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்ப்பது

(மேலும் பார்க்க: கிறிஸ்து, எலிசபெத், தீர்க்கதரிசி

வேதாகமக் குறிப்புக்கள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 22:1 திடீரென்று தேவனிடத்திலிருந்து ஒரு தேவதூதன் ஒரு செய்தியுடன், சகரியா என்னும் பெயர்கொண்ட வயதான ஆசாரியனிடம் வந்தான். சகரியாவும் அவனுடைய மனைவியாகிய எலிசபெத்தும் தேவபக்தியுள்ளவர்களாக இருந்தனர். ஆனால் அவள் குழந்தைகளைப் பெற்றெடுக்க இயலாதவளாக இருந்தாள்.
  • 22:2 தேவதூதன் சகரியாவிடம், “உன் மனைவி ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பாள்” என்று கூறினான். அவனுக்கு யோவான் என்று பெயரிடு”
  • 22:3 உடனடியாக, சகரியாவால் பேசமுடியவில்லை.
  • 22:7 பின்பு தேவன், சகரியா மறுபடியும் பேசுவதற்கு அனுமதித்தார்.

சொல் தரவு:

  • Strong's: G2197