ta_tw/bible/kt/christ.md

9.4 KiB

கிறிஸ்து, மேசியா

உண்மைகள்:

"மேசியா" மற்றும் "கிறிஸ்து" என்ற வார்த்தைகளானது "அபிஷேகம் செய்யப்பட்டவர்" எனவும், தேவனுடைய குமாரனான இயேசுவைக் குறிக்கிறது.

  • "மேசியா" மற்றும் "கிறிஸ்து" ஆகிய இரண்டு வார்த்தைகளும் அவருடைய பிதாவாகிய தேவன் தம் மக்களை அரசராக ஆட்சி செய்ய நியமித்த தேவனுடைய குமாரனைக் குறிக்கவும், பாவம் மற்றும் மரணத்திலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காகவும் புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தப்படுகின்றன.
  • பழைய ஏற்பாட்டில், தீர்க்கதரிசிகள் அவர் பூமிக்கு வருவதற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை எழுதினர்.
  • பெரும்பாலும் "அபிஷேகம்பண்ணப்பட்டவர் " என்ற வார்த்தை பழைய ஏற்பாட்டில் வரப்போகும் மேசியாவை குறிக்க பயன்படுத்தப்படுகிறது.
  • இயேசு இந்தத் தீர்க்கதரிசனங்களில் பலவற்றை நிறைவேற்றி, மேசியா என்பதை நிரூபிக்கும் பல அற்புதமான செயல்களை செய்தார்; அவர் திரும்பி வரும்போது எஞ்சியுள்ள இந்தத் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்.
  • "கிறிஸ்து" என்ற வார்த்தை "கிறிஸ்துவானவர் இயேசு " "கிறிஸ்து ஆகியவற்றில் " பெரும்பாலும் பயன்படுத்தப்படும் ஒரு தலைப்பாகும்.
  • "இயேசு கிறிஸ்து என்ற பெயரில் உள்ளது போல, "கிறிஸ்து என்பது" அவருடைய பெயரின் ஒரு பகுதியாக பயன்படுத்தப்படுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த வார்த்தையை, "அபிஷேகம் செய்யப்பட்டவர்" அல்லது "தேவனுடைய அபிஷேகம் செய்யப்பட்ட இரட்சகர்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • பல மொழிகள் "கிறிஸ்து" அல்லது "மேசியா" போன்றவை தோற்றம் அல்லது ஒலியைக் குறிக்கும் ஒலிபெயர்ப்பு வார்த்தைகளை பயன்படுத்துகின்றன. (பார்க்கவும்: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி
  • மொழிபெயர்க்கப்பட்ட வார்த்தை தொடர்ந்து, "கிறிஸ்து அபிஷேகம் பண்ணப்பட்டவர்" என்ற வார்த்தையின் வரையறையைப் பின்பற்றலாம்.
  • முழு வேதாகமத்திலும் இது எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து இவ்வார்த்தை ஒரே பொருளைக் குறிப்பிடுகிறது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
  • "மேசியா" மற்றும் "கிறிஸ்து " என்ற வார்த்தைகளின் மொழிபெயர்ப்புகள் ஒரே வசனத்தில் வரும்போது (யோவான் 1:41 போன்றவை) சூழல்களில் நன்றாக ஒன்றித்துப்போகின்றன என்பதை உறுதிப்படுத்தவும்.

(மேலும் காண்க: பெயர்களை எப்படி மொழிபெயர்ப்பது

(மேலும் காண்க: தேவகுமாரன், தாவீது, இயேசு, அபிஷேகம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 17:7 மேசியா உலக மக்களை பாவத்திலிருந்து காப்பாற்றுவதற்காக தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆவார்.
  • 17:8 நடந்ததுபோல, இஸ்ரவேல் மக்கள் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன், நீண்ட காலம் காத்திருக்க வேண்டியிருந்தது.
  • __21:1__ஆரம்பத்தில் இருந்து, தேவன் மேசியாவை அனுப்ப திட்டமிட்டார்.
  • __21:4__தேவன் தாவீதின் சந்ததிகளில் ஒருவராக இருப்பார் என்று தாவீது ராஜாவுக்கு உறுதியளித்தார்.
  • 21:5 _மேசியா புதிய உடன்படிக்கையைத் தொடங்குவார்.

21:6 மேசியா_ ஒரு தீர்க்கதரிசியாக, ஆசாரியராக, மற்றும் இராஜாவாக இருப்பார் என்று தேவனுடைய தீர்க்கதரிசிகளும் கூறினார்கள்.

  • __21:9_ஏசாயா தீர்க்கதரிசி ____ மேசியா ஒரு கன்னியின் வயிற்றிலிருந்து பிறப்பார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.
  • 43:7 "ஆனால் தேவன், பரிசுத்தரின் அழிவைக்காணவிடமாட்டார் ஒரு தெய்வத்தை நீக்கி விடமாட்டார் என்ற தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற தேவன் மீண்டும் உயிர்த்தெழுப்பினார்."
  • 43:9 "தேவன் இயேசுவை இரட்சகராகவும் மேசியாவாகவும் ஆக்கினார் என்று நிச்சயமாய் அறிந்து கொள்ளுங்கள்!"
  • 43:11 பேதுரு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் ஒவ்வொருவரும் மனந்திரும்பி, இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுகொள்ளுங்கள், தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார் என்று கூறினார்.
  • __46:6__சவுல் யூதர்களிடம் நியாயப்படுத்தி, இயேசுவே மேசியா என்று குறிப்பிடுகிறார்.

சொல் தரவு:

  • Strong's: H4899, G3323, G5547