ta_tw/bible/kt/anoint.md

6.2 KiB

அபிஷேகம், அபிஷேகிக்கப்பட்டது, அபிஷேகித்தல்

விளக்கம்:

“அபிஷேகம்” என்ற வார்த்தைக்கு ஒரு மனிதன் அல்லது பொருளின்மீது தடவுதல், அல்லது ஊற்றுதல் என்று அர்த்தம். சில வேளைகளில் நல்ல இனிமையான நறுமணம் ஏற்படுவதற்கு எண்ணையுடன் சில வாசனை திரவியங்கள் சேர்ப்பதுன்டு. இவ்வார்த்தையை பரிசுத்த ஆவி ஒருவரை தேர்ந்தெடுத்து வல்லமிப்பது என்றும் உருவகப்படுத்தி கூறலாம்.

  • பழைய ஏற்பாட்டில், ஆசாரியர்கள், அரசர்கள் மற்றும் தீர்க்கதரிசிகளை எண்ணெயினால் அபிஷேகித்து தேவனுடைய ஊழியத்திற்கு பிரித்தெடுப்பதாகும்.
  • பலிபீடம் அல்லது ஆசரிப்பு கூடம் போன்றவைகளையும் எண்ணெயினால் அபிஷேகித்து அவைகள் ஆராதனைக்கும் தேவனை மகிமைப்படுத்தவும் கூடியவை என்று சுட்டிக்காட்டப்பட்டது.
  • புதிய ஏற்பாட்டில், வியாதிக்காரர்களை சுகப்படுத்துவதற்கு எண்ணெயினால் அபிழஷிகித்தார்கள்.
  • புதிய ஏற்பாட்டில் இரண்டு இடங்களில் இயேசுவை வாசனையான எண்ணெயினால் ஒரு பெண் அவரை தொழுது கொண்டதின் அடையாளமாக அபிஷேகித்தால் என்று எழுதப்பட்டிருக்கிறது. இயேசு ஒரு முறை இந்த பெண் செய்ததை அவரின் எதிர்கால அடக்கத்திற்கு ஆயத்தம் செய்ததாக குறிப்பிடுகிறார்..
  • இயேசு மரித்தபின், அவரது நண்பர்கள் அவரது உடலை என்னை மற்றும் சுகந்த வாசனை திரவியங்களாலும் அபிஷேகித்து அடக்கம் செய்தனர்.
  • “மேசியா” (எபிரேயம்) மற்றும் “கிறிஸ்து” (கிரேக்கம்) போன்ற பெயர்கள் “அபிஷேகிக்கப்பட்ட” (ஒருவர்) என்று அர்த்தம்.
  • இயேசு என்ற மேசியா தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசியாகவும், பிரதான ஆசாரியரராவாகவும், மற்றும் ராஜாவாகவும் அபிஷேகம் பண்ணப்பட்டவர்.

மொழிபெயர்புக்கான சிபாரிசுகள்:

  • சூழ்நிலைக்கேற்ப, “அபிஷேகம்” என்ற பதம் “எண்ணெயை மேலே ஊற்றுவது” அல்லது “எண்ணையை மேலெ தடவுதல்” அல்லது “தலையின் மேல் எண்ணையை ஊற்றி அர்பணித்தல்” என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “அபிஷேகம் பண்ணப்படுதல்” என்பதை “எண்ணையை ஊற்றி அர்ப்பணிப்புக்கு நடத்துதல்” அல்லது “நியமித்தல்” அல்லது “அர்ப்பணித்தல்” மொழிப்பெயர்க்கலாம்.
  • சில சூழ்நிலைகளில் “அபிஷேகம்” என்ற பதம் “நியமித்தல் என்றும் மொழிபெயர்க்கலாம்.
  • “அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன்” என்ற சொற்றொடரை “எண்ணெ ஊற்றி அபிஷேகம் பண்ணப்பட்ட ஆசாரியன்” அல்லது “எண்ணெய் ஊற்றி ஆசாரிய ஊழியத்திற்கு பிரிதெடுத்தவர்” என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் பார்க்க: கிறிஸ்து, அர்ப்பணிப்பு, பிரதான ஆசாரியன், யூதர்களின் இராஜா, ஆசாரியன், தீர்க்கதரிசி )

வேத ஆதாரங்கள்:

சொல் தரவு:

  • Strong's: H47, H430, H1101, H1878, H3323, H4397, H4398, H4473, H4886, H4888, H4899, H5480, H8136, G32, G218, G743, G1472, G2025, G3462, G5545, G5548