ta_tw/bible/kt/highpriest.md

7.6 KiB

பிரதான ஆசாரியன்

வரையறை:

"பிரதான ஆசாரியன்" என்ற வார்த்தை, மற்ற இஸ்ரவேல் ஆசாரியர்களின் தலைவராக ஒரு வருடம் சேவை செய்ய நியமிக்கப்பட்ட ஒரு பிரதான ஆசாரியன் என்பதை குறிக்கிறது.

  • பிரதான ஆசாரியன் விசேஷ பொறுப்புகளைக் கொண்டிருந்தார். ஒரு வருடத்திற்கு ஒருமுறை சிறப்புப் பலியை ஆலயத்தின் மிகவும் புனிதமான பகுதிக்குச் செல்ல அனுமதிக்கப்பட்ட ஒரே ஒருவர்தான் அவர்.
  • இஸ்ரவேலருக்கு அநேக ஆசாரியர்கள் இருந்தார்கள்; ஒரே சமயத்தில் ஒரே ஒரு பிரதான ஆசாரியன் மட்டுமே இருந்தார்.
  • இயேசு கைது செய்யப்பட்டபோது, ​​காய்பா உத்தியோக பிரதான ஆசாரியராக இருந்தார். காய்பாவின் 'மாமனார் அன்னா சில நேரங்களில் குறிப்பிட்டுள்ளார், ஏனென்றால் அவர் முன்னாள் பிரதான ஆசாரியனாக இருந்தார், அவர் இன்னும் மக்கள் மீது அதிகாரம் மற்றும் செல்வாக்கைக் கொண்டிருந்தார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "பிரதான ஆசாரியன்" என்பதை "மதிப்பு மிக்க ஆசாரியன்" அல்லது "உயர்ந்த பதவியாளர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • இந்த வார்த்தையானது "பிரதான ஆசாரியன்" என்ற வார்த்தையிலிருந்து வித்தியாசமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும்.

(மேலும் காண்க: அன்னா, காய்பா, பிரதானஆசாரியர்கள், ஆசாரியன், தேவாலயம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 13:8 பிரதான ஆசாரியனைத்_தவிர திரைச்சீலைக்கு பின்புறம் உள்ள அறைக்குள் யாரும் நுழையக் கூடாது, ஏனென்றால் தேவன் அங்கெ இருக்கிறார்.
  • __21:7__வரப்போகும் மேசியா, பூரணமான பிரதான ஆசாரியராக, தேவனுக்கு ஒரு பரிபூரண பலியாக தன்னைத்தானே ஒப்புக்கொடுப்பார்.
  • 38:3 பிரதான ஆசாரியனால்_ வழிகடத்தப்பட்ட யூதத் தலைவர்கள், இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படி யூதாசுக்கு முப்பது வெள்ளிக்காசுகளைக் கொடுத்தார்கள்.
  • 39:1 போர்வீரர்கள் இயேசுவை பிரதான ஆசாரியனுடைய வீட்டிற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
  • 39:3 இறுதியாக, _பிரதான ஆசாரியன்_இயேசுவை நோக்கிப்பார்த்து, எங்களுக்குச் சொல்லும், நீர்தான் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய மேசியாவா? என்று கேட்டான்.
  • 44:7 அடுத்த நாள், யூத தலைவர்கள் பேதுரு மற்றும் யோவானை __ பிரதான ஆசாரியனிடத்திற்கும் மற்ற மதத் தலைவர்களிடத்திற்க்கும் கொண்டுவந்தார்கள்.
  • __45:2__எனவே மத தலைவர்கள் ஸ்தேவானை கைது செய்து __பிரதான ஆசாரியனிடம்__கொண்டுவந்தார்கள். மேலும் பொய் சாட்சிகள் ஸ்தேவானை பற்றி பொய்சொல்ல யூதர்கள், மற்ற தலைவர்களை அழைத்துவந்தார்.
  • 46:1 __ பிரதான ஆசாரியன் __ கிறிஸ்தவர்களைக் கைது செய்து அவர்களை மீண்டும் எருசலேம்நகரத்திற்கு கொண்டுவர தமஸ்கு நகரம் செல்ல சவுல் அனுமதி அளித்தார்.
  • 48:6 இயேசு மகா_ பிரதான ஆசாரியன்_. மற்ற ஆசாரியர்களைப் போலல்லாமல், அவர் உலகில் உள்ள அனைவரின் பாவத்தையும் எடுத்துக்கொள்ளும் ஒரே பலி என்று தன்னை தானே ஒப்புக்கொடுத்தார். இயேசுவே பரிபூரண பிரதான ஆசாரியனாக இருந்தார் . ஏனென்றால் ஒவ்வொருவரும் செய்த பாவத்தின் தண்டனையை தான் ஏற்றுக்கொண்டார்.

சொல் தரவு:

  • Strong's: H7218, H1419, H3548, G748, G749