ta_tw/bible/kt/kingofthejews.md

5.1 KiB

யூதர்களின் அரசன், யூதர்களின் அரசன்

வரையறை:

"யூதர்களின் ராஜா" என்ற வார்த்தை இயேசுவையும் மேசியாவையும் குறிக்கிறது.

  • முதன்முறையாக வேதாகமமானது இந்த தலைப்பை, "யூதர்களின் அரசர்" என்ற குழந்தைக்காக பெத்லகேமுக்குப் பயணம் செய்த ஞானிகளால் இது பயன்படுத்தப்பட்டது என்று பதிவு செய்கிறது.
  • மரியாளுக்கு தேவதூதன்: அவளது மகன், தாவீது ராஜாவின் சந்ததியார் என்றென்றும் நிலைத்திருக்கும் ராஜாவாக இருப்பார் என்று கூறினான்.
  • இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு, ரோம வீரர்கள் இயேசுவை "யூதர்களின் அரசர்" என்றழைத்தனர். இந்த தலைப்பை ஒரு மரபலகையில் மீது எழுதப்பட்டு இயேசுவின் சிலுவை மேல் பொறுத்தப்பட்டது.
  • இயேசு உண்மையில் எல்லா படைப்புகளுக்கும் யூதர்களுக்கும் ராஜாவுக்கும் ராஜாவாக இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "யூதர்களின் ராஜா" என்ற வார்த்தை "யூதர்களுக்கு ராஜாவாக" அல்லது "யூதர்களை ஆட்சி செய்யும் ராஜா" அல்லது "யூதர்களின் மிகச் சிறந்த ஆட்சியாளர்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • மொழிபெயர்ப்பிலுள்ள மற்ற இடங்களில் "ராஜாவின்" சொற்றொடர் எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைப் பார்க்கவும்.

(காண்க: சந்ததி, யூதர், இயேசு, ராஜா, இராச்சியம், தேவனின் இராச்சியம், ஞானிகள்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 23:9 சில நாட்களுக்குப் பிறகு, கிழக்கிலிருந்து நாடுகளில் இருந்த ஞானமுள்ளவர்கள் வானத்தில் அசாதாரண நட்சத்திரத்தைக் கண்டனர். அவர்கள் யூதர்களுக்கு ஒரு புதிய இராஜா பிறந்தார் என்று அவர்கள் உணர்ந்தனர்.
  • 39:9 பிலாத்து இயேசுவிடம், "நீ யூதர்களுக்கு இராஜாவா?" என்று கேட்டான்.
  • 39:12 ரோம வீரர்கள் இயேசுவை சவுக்கால் அடித்தபின், ஒரு ராஜவஸ்திரத்தையும் ஒரு முள்ளால் கிரீடத்தையும் வைத்தனர். அப்பொழுது அவர்கள் அவரைப் பரியாசம்பண்ணி: இதோ, யூதருடைய இராஜா என்றார்கள்.
  • 40:2 பிலாத்து, "யூதர்களின் இராஜா" என்று எழுதும்படிக் கட்டளையிட்டு, அதை இயேசுவின் மேல் சிலுவை மீது வைத்தார்.கள்

சொல் தரவு:

  • Strong's: G935, G2453