ta_tw/bible/kt/jew.md

4.4 KiB

யூதர், யூதர்கள், யூதர்கள்

உண்மைகள்:

ஆபிரகாமின் பேரனான யாக்கோபின் சந்ததியினர் யூதர்கள். "யூதன்" என்ற வார்த்தை "யூதா" என்ற வார்த்தையிலிருந்து வருகிறது.

  • பாபிலோன் சிறையிருப்பிலிருந்து யூதாவுக்குத் திரும்பி வந்தபிறகு, இஸ்ரவேலர்கள் "யூதர்கள்" என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
  • மேசியாவாகிய இயேசு யூதர். இருப்பினும் யூத மதத் தலைவர்கள் இயேசுவை நிராகரித்து, கொல்லப்பட வேண்டுமெனக் கோரினர்.
  • பெரும்பாலும் "யூதர்கள்" என்ற வார்த்தை யூதர்களின் தலைவர்களைக் குறிக்கிறது, யூத ஜனங்களையல்ல. அந்தச் சூழல்களில், சில மொழிபெயர்ப்புகள் " தலைவர்களின்"என்பதை தெளிவுபடுத்துவதற்காக சேர்க்கின்றன.

(மேலும் காண்க: ஆபிரகாம், யாக்கோபு, இஸ்ரேல், பாபிலோன், யூதத் தலைவர்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 20:11 இஸ்ரவேலர்கள் இப்போது யூதர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் பாபிலோனில் தங்கள் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தார்கள்.
  • 20:12 எனவே, எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு, சிறையில் இருந்த ஒரு சிறிய குழு, யூதாவில் எருசலேம் நகரத்திற்குத் திரும்பி வந்தது.
  • 37:10 யூதர்களாகிய பலர் இந்த அற்புதத்தின் காரணமாக இயேசுவை நம்பினர்.
  • 37:11 ஆனால் யூத மதத் தலைவர்கள் பொறாமை கொண்டிருந்தார்கள், அதனால் அவர்கள் இயேசுவையும் லாசருவையும் கொலை செய்யத் திட்டமிட்டார்கள்.
  • 40:2 பிலாத்து இயேசுவின் சிலுவைக்கு மேலாக “யூதருக்கு இராஜா_என்று எழுதும்படிக் கட்டளையிட்டான்
  • 46:6 உடனே, சவுல் தமஸ்குவில், "இயேசு தேவனுடைய குமாரன்" என்று சொல்லி, சவுல் பிரசங்கிக்கத் தொடங்கினார்.

சொல் தரவு:

  • Strong's: H3054, H3061, H3062, H3064, H3066, G2450, G2451, G2452, G2453, G2454