ta_tw/bible/other/jewishleaders.md

7.0 KiB

யூத அதிகாரிகள், யூத தலைவர்

உண்மைகள்:

"யூதத் தலைவர்" அல்லது "யூத அதிகாரம்" என்ற வார்த்தை, தேவனுடைய சட்டங்களின் ஆசாரியர்களும் ஆசிரியர்களும் போன்ற மதத் தலைவர்களை குறிக்கிறது. மத சார்பற்ற விஷயங்களைப் பற்றி தீர்ப்புகளை வழங்குவதற்கான அதிகாரமும் அவர்களுக்கு இருந்தது.

  • யூத தலைவர்கள் பிரதான ஆசாரியர்கள்,வேதபாரகர்கள் (தேவனுடைய சட்டங்களின் ஆசிரியர்கள்) ஆகியோர்.
  • யூதத் தலைவர்களின் இரண்டு பிரதான குழுக்கள் பரிசேயரும் சதுசேயரும்.
  • நியாயப்பிரமாணங்களைப் பற்றிய தீர்ப்புகளை எடுக்கும்படி எருசலேமிலிருந்த யூத சபைகளில் எழுபது யூதத் தலைவர்கள் கூடினார்கள்.
  • பல யூத தலைவர்கள் பெருமிதம் அடைந்தார்கள், அவர்கள் தங்களை நீதியுள்ளவர்கள் என்று நினைத்தார்கள். அவர்கள் இயேசுவைக் குறித்து பொறாமைப்பட்டார்கள், அவருக்கு தீங்கிழைக்க விரும்பினர். அவர்கள் தேவனை அறிந்திருப்பதாக நினைத்தனர், ஆனால் அவருக்குக் கீழ்ப்படியவில்லை.
  • "யூதர்கள்" என்பது பெரும்பாலும் யூதத் தலைவர்களைக் குறிப்பிட்டு, குறிப்பாக இயேசுவைக் கோபமடைந்து, அவரை ஏமாற்றுவதற்கு அல்லது தீங்குவதற்கு முயற்சித்தார்கள்.
  • இந்த சொற்கள் "யூத ஆட்சியாளர்களாக" அல்லது "யூத மக்களை ஆட்சி செய்த ஆண்கள்" அல்லது "யூத மதத் தலைவர்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.

மேலும் காண்க: யூதர், பிரதான ஆசாரியர்கள், சங்கம், பிரதான ஆசாரியன், பரிசேயர், ஆசாரியன், சதுசேயன், வேதபாரகன்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 24:3 பல மார்க்கத் தலைவர்கள் யோவான்மூலம் ஞானஸ்நானம் பெற்றனர், ஆனால் அவர்கள் மனந்திரும்பவில்லை அல்லது தங்கள் பாவங்களை அறிக்கையிடவில்லை.
  • 37:11 ஆனால் யூதர்களின் மார்க்கத் தலைவர்கள்_ பொறாமைகொண்டனர். ஆகவே அவர்கள் ஒன்று சேர்ந்து இயேசுவையும் லாசரையும் எப்படிக் கொல்வது என்று திட்டமிட்டனர்.
  • 38:2 அவன் (யூதாஸ்), யூதத் தலைவர்கள் இயேசுவை மேசியாஅல்ல என்று மறுதலித்து, அவரைக் கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக அறிந்துகொண்டான்..
  • 38:3 பிரதான ஆசாரியரால் வழிநடத்தப்பட்ட யூதத் தலைவர்கள், இயேசுவைக் காட்டிக் கொடுக்க யூதாசுக்கு முப்பது வெள்ளி நாணயங்களைக் கொடுத்தார்கள்.
  • 39:5 யூதத்தலைவர்கள் பிரதான ஆசாரியனிடம், "அவர் (இயேசு) மரணத்திற்கு பாத்திரர் !" என்று கூறினர்.
  • 39:9 அடுத்த நாள் காலையில், யூததலைவர்கள் இயேசுவை ரோம ஆளுநரான பிலாத்துவிடம் அழைத்து வந்தனர்.
  • 39:11 ஆனால் யூத தலைவர்கள் மற்றும் கூட்டத்தினர் "அவரைச் சிலுவையில் அறையுங்கள்!" என்று சத்தமிட்டனர்.
  • 40:9 பின்னர் இயேசுவை விசுவாசித்த யோசேப்பு மற்றும் நிக்கொதேமு, ஆகிய இரண்டு யூதத்தலைவர்கள் பிலாத்திவிடம் இயேசுவின் சரீரத்தைக் கேட்டனர்.
  • 44:7 அடுத்த நாளில் யூத தலைவர்கள் மற்றும் கூட்டத்தினரிடம் பேதுருவையும் யோவானையும் பிரதான ஆசாரியரிடம் கொண்டுவந்தனர்.!"

சொல் தரவு:

  • Strong's: G2453