ta_tw/bible/other/council.md

4.2 KiB

ஆலோசனை சங்கம், ஆலோசனை சங்கங்கள்

வரையறை:

ஒரு ஆலோசனை சங்கம் என்பது, விவாதிக்கவும் ஆலோசனை வழங்கவும், முக்கிய விஷயங்களைப் பற்றிய முடிவுகளை எடுக்கவும் கூடிய ஒரு மக்கள் குழு ஆகும்.

  • ஒரு ஆலோசனை சங்கம் வழக்கமாக சட்ட ரீதியான எடுக்கப்பட்ட முடிவுகள் போன்ற ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக அதிகாரபூர்வமான மற்றும் ஓரளவு நிரந்தர வழியில் ஏற்பாடு செய்யப்படுகிறதாகும்.
  • எருசலேமில் "யூத ஆலோசனைச் சங்கம்" என அழைக்கப்படும் "சனகெரிப் சங்கம்" என்றழைக்கப்பட்ட சங்கத்தில் 70 யூத மதத் தலைவர்கள், தலைமைக் குருக்கள், மூப்பர்கள், வேதபாரகர்கள், பரிசேயர்கள், சதுசேயர்கள் போன்ற யூதத் தலைவர்கள் அங்கத்தினர்களாக இருந்தனர். இயேசுவை விசாரணைக்கு உட்படுத்திய மதத் தலைவர்களின் சங்கமானது, அவர் கொல்லப்பட வேண்டும் என்று முடிவு செய்தது.
  • மற்ற நகரங்களில் சிறிய யூத ஆலோசனைச்சங்கங்களும் இருந்தன.
  • சுவிசேஷத்தைப் பிரசங்கித்ததற்காக கைது செய்யப்பட்டபோது அப்போஸ்தலன் பவுல் ரோம ஆலோசனை சங்கத்திற்கு முன்பாகக் கொண்டுவரப்பட்டார்.
  • சூழ்நிலையைப் பொறுத்து, " ஆலோசனை சங்கம் " என்ற வார்த்தையை "சட்டசபை" அல்லது "அரசியல் சட்டமன்றம்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • " ஆலோசனை சங்கத்தில்" என்பது ஏதாவது முடிவு செய்யக்கூடிய ஒரு சிறப்பு கூட்டம் என்று பொருள்படும்.
  • இது "ஆலோசனை" அதாவது "ஞானமான ஆலோசனை" என்னும் அர்த்தம்கொண்ட வார்த்தையைவிட வேறு வார்த்தையாகும் என்பதைக் கவனியுங்கள்.

(மேலும் காண்க: கூடுகை, ஆலோசனை, பரிசேயர், நியாயப்பிரமாணம், ஆசாரியன், சதுசேயன், வேதபாரகன்

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H4186, H5475, H7277, G1010, G4824, G4892