ta_tw/bible/kt/pharisee.md

2.9 KiB

பரிசேயர், பரிசேயர்கள்

உண்மைகள்:

பரிசேயர்கள் இயேசுவின் காலத்தில் யூத மதத் தலைவர்களின் முக்கியமான, சக்திமிக்க குழு.

  • அவர்களில் பலர் மத்தியதர வர்க்க வர்த்தகர்கள், அவர்களில் சிலர் ஆசாரியர்கள்.
  • எல்லா யூதத் தலைவர்களிலிருந்தும் பரிசேயர்கள் மோசேயின் சட்டங்களையும் மற்ற யூத சட்டங்களையும் பாரம்பரியங்களையும் பின்பற்றுவதில் மிகவும் கண்டிப்பானவர்களாய் இருந்தனர்.
  • அவர்களைச் சுற்றி இருக்கும் புறஜாதிகளின் செல்வாக்கிலிருந்து யூத ஜனங்களை பிரித்து வைத்திருப்பதை அவர்கள் மிகவும் கவனித்தனர். "பரிசேயர்" என்ற வார்த்தை "பிரிக்க" என்ற வார்த்தையிலிருந்து வருகிறது.
  • பரிசேயர்கள் மரணத்திற்குப் பின் வாழ்க்கை உண்டு என நம்பினார்கள்; அவர்கள் தேவதூதர்கள் மற்றும் பிற ஆவிக்குரிய உயிரினங்கள் இருப்பதை நம்பினர்.

பரிசேயர்களும் சதுசேயர்களும் இயேசுவையும் ஆரம்ப கால கிறிஸ்தவர்களையும் தீவிரமாக எதிர்த்தனர்.

(மேலும் காண்க: சங்கம், யூத தலைவர்கள், சட்டம், சதுசேயர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G5330