ta_tw/bible/names/abraham.md

5.4 KiB

ஆபிரகாம், ஆபிராம்

உண்மைகள்:

ஊர் தேசத்தின் கல்தேயஆபிரகாம் தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட இஸ்ரவேலின் முற்பிதாவாகிய அவனுடைய பெயரை “ஆபிரகாம்” என்று தேவன் மாற்றினர்

  • “ஆபிராம்” என்ற பெயருக்கு “கனப்படுத்தப்பட்ட தகப்பன்” என்று அர்த்தம்.
  • “ஆபிரகாம்” என்றால் “சந்ததிகளுக்கு தந்தை” என்று அர்த்தம்
  • ஆபிரகாம் பல சந்ததிகளைப் பெற்று, பெரிய தேசமாவான் என்று தேவன் வாக்கருளினார்.
  • ஆபிரகாம் தேவனை விசுவாசித்து அவருக்கு கீழ்படிந்தான். தேவன் ஆபிரகாமை கல்தேய தேசத்திலிருந்து கானானுக்குள் செல்ல வழிநடத்தினார்.
  • ஆபிரகாமும் அவனது மனைவி சாராளும், தங்களது வயது முதிர்ந்த காலத்தில் கானானில் வசித்தபோது ஈசாக்கு என்ற மகனை பெற்றார்கள்.

(மொழிபெயர்ப்பு யோசனைகள்: பெயர்களை மொழிபெயர்ப்பது

(மேலும் பார்க்க: கானான், கல்தியா, சாராள், ஈசாக்)

வேத விளக்கங்கள்:

வேதாகம கதைகளிலிருந்து உதாரணங்கள்:

  • 4:6 ஆபிராம் கானானை அடைந்தவுடன், “உன்னை சுற்றிப் எல்லாவற்றையும் பார்” என்று தேவன் கூறினார். நீ காணும் எல்லா நிலங்களையும் உனக்கும் உன் சந்ததிக்கும் பரம்பரைசொத்தாக தருவேன்.
  • 5:4 ஆபிராம் என்ற அவனுடைய பெயரை “ஆபிரகாம்” என்று தேவன் மாற்றினர் அதற்கு “சந்ததிகளுக்கு தந்தை” என்று அர்த்தம்.
  • 5:5 ஒரு வருடத்திற்கு பின்பு, ஆபிரகாமுக்கு நூறு வயதும், சாராளுக்கு தொன்னுறு வயதாகும் போது, சாராள் ஆபிரகாமுக்கு ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள்.
  • 5:6 ஈசாக்கு வாலிப வயதுஉடையவனாக இருக்கும்போது, தேவன் ஆபிரகாமுடைய விசுவாசத்தை சோதிக்கும்படியாக, “உன்னுடைய ஒரே பேறான குமாரனை, கொன்று எனக்கு பலியிடு” என்றார்.
  • 6:1 ஆபிரகாம் வயது முதிர்ந்தவனானபோது, ஈசாக்கு திருமண வயதை எட்டிய போது, ஆபிரகாம் தனது வேலைக்காரர்களை அவனது முறையார்களிடத்தில் அனுப்பி ஈசாக்குக்கு ஒரு பெண்ணை தேடினான்.
  • 6:4 பலகாலம் சென்ற பின்பு, ஆபிரகாம் மரித்தான், அவனுக்கு தேவன் பண்ணின எல்லா உடன்படிக்கைகளும் அவனது குமாரனாகிய ஈசாக்குக்கு அருளப்பட்டது.
  • 21:2 ஆபிரகாம் மூலம் உலகின் சகல ஜனங்களும் ஆசிர்வாதம் பெறுவார்கள் என்று தேவன் வாக்குரைத்தார்.

சொல் தரவு:

  • Strong's: H87, H85, G11