ta_tw/bible/names/isaac.md

6.3 KiB

ஈசாக்கு

உண்மைகள்:

ஈசாக்கு, ஆபிரகாம் மற்றும் சாராளின் ஒரே மகன். அவர்கள் மிகவும் வயதானவர்களாக இருந்தபோதிலும் அவர்களுக்கு ஒரு மகனைக் கொடுப்பதாக தேவன் வாக்கு கொடுத்திருந்தார்.

  • " ஈசாக்கு " என்ற பெயர் "அவர் சிரிக்கிறார்." என்று பொருள். சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பார் என ஆபிரகாமிடம் தேவன் சொன்னபோது ஆபிரகாம் சிரித்தார், ஏனென்றால் அவர்கள் இருவரும் முதியவர்களாக இருந்தார்கள். சில நேரம் கழித்து, இந்த செய்தியை கேட்டபோது சாரா சிரித்தார்.
  • ஆனால் தேவன் தம்முடைய வாக்குறுதியை நிறைவேற்றி, ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் வயோதிக வயதில் ஈசாக்கு பிறந்தார்.
  • ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை யாவும் ஈசாக்குக்கும் அவருடைய சந்ததியாருக்கும் என்றென்றைக்கும் இருக்கும் என்று ஆபிரகாமிடம் தேவன் சொன்னார்.
  • ஈசாக்கு இளைஞராக இருந்தபோது, ​​ஈசாக்கை பலியிடும்படி கட்டளையிட்டதன் மூலம் தேவன் ஆபிரகாமின் விசுவாசத்தை சோதித்தார்.
  • ஈசாக்கின் மகன் யாக்கோபுக்குப் பன்னிரண்டு பிள்ளைகள் இருந்தனர், அதன் பின் இஸ்ரவேல் ஜனத்தின் பன்னிரண்டு கோத்திரங்களாக ஆனார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்க), [ஆபிரகாம், சந்ததி, நித்தியம், நிறைவேற்றுதல், யாக்கோபு, சாராள், இஸ்ரவேல் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 5:4 "உனது மனைவி சாராயிக்கு ஒரு மகன் இருப்பான், அவன் வாக்குத்தத்தம் மகனாக இருப்பான். அவனுக்கு ஈசாக்கு என்று பெயரிடு "
  • 5:6 ஈசாக்கு ஒரு இளைஞனாக இருந்தபோது, ​​ஆபிரகாமின் விசுவாசத்தை தேவன் பரிசோதித்து, "உன் ஒரே மகனை நீ எடுத்து, என்னை ஒரு பலியாகக் கொன்றுவிடு" என்று சொன்னார்.
  • 5:9 தேவன் ஈசாக்கு க்குப் பதிலாக ஆட்டுக்கடாவை ஏற்பாடு செய்தார்.
  • 6:1 ஆபிரகாம் மிக வயதானவராக இருந்தபோது, அவருடைய மகன் ஈசாக்கு, ​​ஒரு மனிதனாக வளர்ந்தார்., ஆபிரகாம் தன் உறவினர்களின் இடத்திற்கு தனது மகனுக்கு மனைவியாக ஒரு பெண்ணை தேர்ந்தெடுக்க தன் ஊழியர்களில் ஒருவரை அனுப்பினார்.
  • 6:5 ஈசாக்கு ரெபெக்காளுக்காக ஜெபம் செய்தார், மேலும் இரட்டையருடன் கர்ப்பம் தரிக்க தேவன் அனுமதித்தார்.
  • 7:10 பின்னர் ஈசாக்கு இறந்தார், மற்றும் யாக்கோபு மற்றும் ஏசா அவரை அடக்கம். செய்தனர். ஆபிரகாமுக்குக் தேவனுடைய வாக்குறுதி ஈசாக்குக்கும், பின்னர் யாக்கோபுக்குச் சென்றது..

சொல் தரவு:

  • Strong's: H3327, H3446, G2464