ta_tw/bible/other/12tribesofisrael.md

3.4 KiB

இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்கள், இஸ்ரவேலுடைய பிள்ளைகளின் பன்னிரண்டு கோத்திரங்கள், பன்னிரண்டு கோத்திரங்கள்

விளக்கம்:

“இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்கள்” யாக்கோபுவின் பன்னிரெண்டு குமாரர்களையும் அவர்களது சந்ததிகளையும் குறிக்கும்.

  • யாக்கோபு ஆபிரகாமின் பேரன் ஆவான். பின்னாளில் யாக்கோபு என்னும் அவனது பெயரை தேவன் இஸ்ரவேல் என்று பெயர் மாற்றம் செய்தார்.
  • இஸ்ரவேல் கோத்திரத்தாரின் பெயர்களாவன: ரூபன், சிமியோன், லேவி, யூதா, தான், நப்தலி, காத், ஆசார், இசக்கார், செபுலோன், யோசப்பு மற்றும் பென்யமீன்.
  • லேவியின் கோத்திரத்துக்கு சுதந்திரமாக எவ்வித நிலமும் கொடுக்கப்படவில்லை ஏனெனில் இவர்கள் தேவனுக்கும் அவரது ஜனத்துக்கும்ஆசாரிய ஊழியம் செய்ய பிரித்தெடுக்கப்பட்ட ஜனம்.
  • யோசேப்பு இரண்டு மடங்காய் பெற்ற சுதந்திரத்தை, தனது இரண்டு குமாரர்களாகிய எப்பிராயீம் மற்றும் மனாசேக்கு கொடுத்தான்.
  • வேதத்தில் பல இடங்களில் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்கள் சில வித்தியாசங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. சில இடங்களில் லேவி, யோசேப்பு, அல்லது தான் போன்றோரின் பெயர்கள் விடப்பட்டு யோசேப்பின் இரண்டு குமாரர்களாகிய எப்பிராயீம் மற்றும் மனாசே பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

(மேலும் பார்க்க: மரபுரிமை, இஸ்ரேல், யாக்கோபு, ஆசாரியன், இனம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3478, H7626, H8147, G1427, G2474, G5443