ta_tw/bible/names/jacob.md

6.4 KiB

இஸ்ரவேல், இஸ்ரவேலன், இஸ்ரவேலர்கள், யாக்கோபு

உண்மைகள்:

யாக்கோபு, ஈசாக்கு மற்றும் ரெபேக்காளின் இளைய இரட்டை மகன்.

  • யாக்கோபின் பெயர் "அவர் குதிகாலை பிடித்துக்கொண்டவன்", அதாவது "அவர் ஏமாற்றுகிறார்" என்பதன் அர்த்தம். யாக்கோபு பிறக்கிறபோது, ​​அவன் இரட்டைச் சகோதரனாகிய ஏசாவின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டான்.
  • பல வருடங்கள் கழித்து, தேவன் யாக்கோபின் பெயரை "இஸ்ரவேல்" என்று மாற்றினார், அதாவது "அவர் தேவனுடன் போராடுகிறார்." என்று அர்த்தம்.
  • யாக்கோபு புத்திசாலித்தனமாகவும் ஏமாற்றுகிறவராகவும் இருந்தார். தனது மூத்த சகோதரர், ஏசாவின் முதற்பேறான ஆசீர்வாதத்தையும் சுதந்தர உரிமையையும் எடுக்க வழிகளைக் கண்டார்.

யாக்கோபு தன் தாயகத்தை விட்டு வெளியேறி, அவரைக் கொலை செய்ய திட்டமிட்டார். ஆனால் ஆண்டுகள் கழித்து, யாக்கோபு தன் மனைவிகளோடு, ஏசா வாழ்ந்து வந்த கானானுக்குத் திரும்பி வந்தார்; அவர்கள் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் அமைதியாக வாழ்ந்தார்கள்.

  • யாக்கோபுக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தனர். அவர்களுடைய சந்ததியினர் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களாக ஆனார்கள்.
  • மத்தேயுவின் வம்சாவழியிலுள்ள யோசேப்பின் தந்தை என யாக்கோபு என்ற வேறு ஒரு மனிதர் பட்டியலிடப்பட்டுள்ளது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்க கானான்](../names/canaan.md), ஏமாற்று, ஏசா, ஈசாக்கு, இஸ்ரேல், ரெபேக்காள், இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்கள்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 7:1 சிறுவர்கள் வளர்ந்தபொழுது, ரெபேக்காள் __ யாக்கோபை நேசித்தாள், ஆனால் ஈசாக்கு ஏசாவை நேசித்தார். யாக்கோபு வீட்டில் தங்குவதை விரும்பினான், ஆனால் ஏசா வேட்டையாடுவதை நேசித்தான்.
  • 7:7 யாக்கோபு பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வந்தார், அந்த சமயத்தில் அவர் திருமணம் செய்து, பன்னிரண்டு மகன்களையும் ஒரு மகளையும் பெற்றிருந்தார். தேவன் அவரை மிகவும் செல்வந்தராக ஆக்கினார்.
  • 7:8 கானானில் இருந்த தனது வீட்டிலிருந்து இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, யாக்கோபு அங்கே தன் குடும்பத்தாரும், அவரது வேலைக்காரர்களும், அவனது மிருகஜீவன்களோடு சேர்ந்து வந்தனர்.
  • 7:10 உடன்படிக்கை தேவன் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்து, அது பின்னர் ஈசாக்குக்கு வந்து இப்போது யாக்கோபுக்கு கடந்து வந்தது.
  • 8:1 பல வருடங்கள் கழித்து, யாக்கோபு ஒரு வயதான மனிதராக இருந்தபோது, ​​தன்னுடைய பிரியமான மகன் யோசேப்பை அவனது சகோதரர்களை கண்காணிக்கும்படி அனுப்பினார்.

சொல் தரவு:

  • Strong's: H3290, G2384