ta_tw/bible/kt/eternity.md

11 KiB

நித்தியம், நித்தியமான, நித்தியமான,என்றென்றும்

வரையறை:

"நித்தியமான" மற்றும் "நித்தியம்" ஆகிய சொற்கள் மிகவும் ஒத்த அர்த்தங்களைக் கொண்டிருக்கின்றன, அவை எப்போதுமே இருக்கும் அல்லது எப்பொழுதும் நீடிக்கும் என்று குறிப்பிடுகின்றன.

  • "நித்தியம்" என்ற வார்த்தை எந்த ஆரம்பமும் அல்லது முடிவும் இல்லாத நிலையில் இருக்கிறது. இது முடிவடையாத வாழ்க்கை என்றும் குறிப்பிடலாம்.
  • பூமியிலுள்ள இந்த வாழ்க்கை முடிந்த பிறகு, தேவனோடு அல்லது தேவனை விட்டுப் பிரிந்து நரகத்திலிருந்தும் மனிதர்கள் நித்தியத்தை நித்தியமாக செலவிடுவார்கள்.
  • புதிய ஏற்பாட்டில் "நித்திய ஜீவன்" மற்றும் "நித்திய வாழ்க்கை" என்ற சொற்கள் பரலோகத்தில் தேவனோடு என்றென்றும் வாழ்வதைக் காட்டுகின்றன.
  • "என்றென்றும் எப்போதும்" என்ற சொற்றொடரை முடிக்காது, நித்தியமான அல்லது நித்திய வாழ்வைப் போன்றது என்று அர்த்தமாகும்.

"எப்போதும்" என்ற வார்த்தை ஒருபோதும் முடிவில்லாத நேரத்தைக் குறிக்கிறது. சில நேரங்களில் இது "மிக நீண்ட நேரம்" என்ற அர்த்தத்தில்உருவகமாக பயன்படுத்தப்படுகிறது.

  • "எப்பொழுதும் என்றென்றும் " என்ற வார்த்தை எப்பொழுதும் நடக்கும் அல்லது இருப்பதாக வலியுறுத்துகிறது.
  • நித்தியமான அல்லது நித்திய வாழ்க்கை என்னவென்பதை வெளிப்படுத்தும் ஒரு வழி "என்றென்றும் எப்போதும்" என்ற சொற்றொடர் ஆகும். இது முடிவடையாத நேரத்தைக் குறிக்கும் கருத்தாகும்.
  • தாவீதின் சிசிங்காசனம் "என்றென்றைக்கும்"இருக்கும் என்று தேவன் சொன்னார். இது தாவீதின் சந்ததியாரான இயேசு என்றென்றும் அரசராக ஆட்சி செய்வார் என்ற உண்மையை இது குறிக்கிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "நித்திய" அல்லது "நித்தியமான "என்பதை மொழிபெயர்ப்பதற்கான மற்ற வழிகள், "முடிக்கப்படாத" அல்லது "ஒருபோதும் நிறுத்துவதில்லை" அல்லது "எப்போதும் தொடரும் என்பதை உள்ளடக்கும்.".

  • "நித்திய ஜீவன்" மற்றும் "முடிவில்லாத ஜீவன்" என்ற வார்த்தைகளும் "முடிவடையாத வாழ்க்கை" அல்லது "நிறுத்தாமலேயே தொடரும் வாழ்க்கை" அல்லது "எங்கள் சரீரங்களை என்றென்றும் வாழும்படி செய்வது" என்று மொழிபெயர்க்கலாம்.

  • சூழ்நிலையைப் பொறுத்து, "நித்தியத்துவத்தை" மொழிபெயர்க்க வெவ்வேறு வழிகளில் "காலத்திற்கு முன்பே" அல்லது "முடிவில்லா வாழ்வு" அல்லது "பரலோகத்தில் வாழ்வது" ஆகியவை அடங்கும்.

  • உள்ளூர் அல்லது தேசிய மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பில் எப்படி இந்த வார்த்தை மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் கவனியுங்கள். (பார்க்கவும்: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி

  • "எப்பொழுதும்" என்பதை "எப்பொழுதும்" அல்லது "முடிவுக்கு வராத" என்பதன் மூலம் மொழிபெயர்க்க முடியும்.

  • "நிரந்தரமாக நீடிக்கும்" என்ற சொற்றொடர் "எப்பொழுதும் இருப்பதாக" அல்லது "ஒருபோதும் நிறுத்த முடியாது" அல்லது "எப்போதும் தொடரும்" என்றும் மொழிபெயர்க்கலாம்.

  • "எப்பொழுதும் என்றென்றும்" என்பதை "எப்பொழுதும் முடிவடையாது" அல்லது "எப்பொழுதும் முடிவு கிடையாது" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.

  • தாவீதின் சிம்மாசனம் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதை "தாவீதின் சந்ததியார் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்கள்" அல்லது "தாவீதின் சந்ததியார் எப்பொழுதும் ஆளுவார்கள்." என்று மொழிபெயர்க்கலாம்

(மேலும் காண்க: தாவீது, ஆட்சி, வாழ்க்கை)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 27:1 ஒரு நாள் யூத நியாயப்பிரமாணத்தில் தேறினவரான இயேசுவைச் சோதிப்பதற்காக அவரிடம் வந்து "போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்.
  • __28:1__ஒரு நாள் செல்வந்தனாகிய இளைஞன் ஒருவன் இயேசுவிடம் வந்து, "நல்ல போதகரே, நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டான். இயேசு அவனை நோக்கி: நீ நல்ல காரியத்தைக்குறித்து என்னிடம் ஏன் கேட்கிறாய் என்று கேட்டார். தேவன் ஒருவர் மட்டுமே நல்லவராக இருக்கிறார்,. ஆனால் நீங்கள் நித்தயஜீவனைப் பெறவேண்டும் என்றால், தேவனின் சட்டங்களுக்கு கீழ்ப்படியுங்கள். "
  • 28:10 இயேசு பிரதியுத்தரமாக: என் நாமத்தினிமித்தமாக சகோதரர், சகோதரிகள், தந்தை, தாய், பிள்ளைகள், சொத்து ஆகியவற்றை இழந்த ஒவ்வொருவருக்கும் 100 மடங்கு அதிகமான பலன் கிடைக்கும், மேலும் _ நித்தயஜீவனைப் _ பெறுவீர்கள்.

சொல் தரவு:

  • Strong's: H3117, H4481, H5331, H5703, H5705, H5769, H5865, H5957, H6924, G126, G165, G166, G1336