ta_tw/bible/kt/life.md

10 KiB
Raw Permalink Blame History

வாழ்க்கை, வாழ, வாழ்ந்து, உயிர்கள், வாழும், உயிரோடு

வரையறை:

இந்த சொற்கள் அனைத்தும் உயிரோடு இருப்பதைக் குறிக்கிறது, இறந்தவை அல்ல. ஆவிக்குரிய ரீதியாக உயிருடன் இருப்பதைக் குறிக்க அவர்கள் உருவகப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறார்கள். "சரீரப்பிரகாரமான வாழ்க்கை" மற்றும் "ஆவிக்குரிய வாழ்க்கை" என்பதன் பொருள் என்ன என்பதை பின்வருவன விவரிக்கிறது.

1. சரீரப்பிரகாரமான வாழ்க்கை

சரீரப்பிரகாரமான உடலில் உள்ள ஆவியின் பிரசன்னம். ஆதாமின் உடலுக்குள் தேவன் ஜீவனை ஊதினார், அவர் உயிருள்ளவராக ஆனார்.

  • ஒரு "உயிர்" என்பது " இரட்சிக்கப்பட்டது ஒரு வாழ்க்கை " என ஒரு தனி நபரைக் குறிக்கலாம்.
  • சில சமயங்களில் "வாழ்க்கை" என்ற வார்த்தை, "அவரது வாழ்க்கை சுவாரசியமாக இருந்தது" என்ற வாழ்க்கை அனுபவத்தைக் குறிக்கிறது.
  • இது ஒரு நபரின் ஆயுட்காலம் எனவும், "அவரது வாழ்நாள் முடிவில்" என்றும் குறிப்பிடுகிறது.
  • "வாழ்க்கை" என்பது உடல் ரீதியாக உயிருடன் இருப்பதைக் குறிக்கலாம், உதாரணமாக "என் அம்மா இன்னும் உயிரோடு இருக்கிறார்." இது எங்காவது வாழும் இடமாகவும் இருக்கலாம், "அவர்கள் நகரத்தில் வசிக்கிறார்கள்."
  • வேதாகமத்தில், "வாழ்க்கை" என்ற கருத்து பெரும்பாலும் "மரணம்" என்ற கருத்தோடு வேறுபடுகிறது.

2. ஆவிக்குரிய வாழ்க்கை

  • தேவனோடு இயேசுவை விசுவாசித்தால் அவர் ஆவிக்குரிய வாழ்க்கை வாழ்கிறார். அந்த நபருக்குள் பரிசுத்த ஆவியானவர் வாழ்ந்து வருகிறார்.
  • இந்த வாழ்க்கை முடிவுக்கு வரவில்லை என்பதைக் குறிக்கும் "நித்திய ஜீவன்" என்றும் அழைக்கப்படுகிறது.
  • ஆவிக்குரிய வாழ்க்கையின் எதிர்விளைவு ஆன்மீக மரணம், அதாவது தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டு, நித்திய தண்டனை அனுபவிக்கும் பொருள்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • சூழலை பொறுத்து, "வாழ்க்கை" என்பது "இருத்தல்" அல்லது "நபர்" அல்லது "ஆத்துமா" அல்லது "இருப்பது" அல்லது "அனுபவம்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "வாழ்தல்" என்ற வார்த்தை "வசித்தல்" அல்லது "வாழ்கிற" அல்லது "இருப்பதாக" மொழிபெயர்க்கலாம்.
  • "அவருடைய ஜீவனின் முடிவு" என்ற சொற்றொடரை "வாழ்வதை நிறுத்திவிட்டபோது" என மொழிபெயர்க்கலாம்.
  • "தங்கள் உயிர்களை காப்பாற்றியது" என்ற சொற்றொடர் "அவர்களை வாழ அனுமதித்தது" அல்லது "அவர்களைக் கொல்லவில்லை" என மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
  • "தங்கள் உயிர்களை ஆபத்திற்குள்ளாக்கினார்கள்" என்ற சொற்றொடரை "அவர்கள் தங்களை ஆபத்தில் தள்ளிவிட்டார்கள்" அல்லது "அவர்களைக் கொன்றுவிடுவார்கள் என மொழிபெயர்க்கலாம்.
  • ஆவிக்குரிய ரீதியில் உயிரோடு இருப்பதாக வேதாகமம் பேசும்போது, "வாழ்க்கை" என்பது "ஆன்மீக வாழ்க்கை" அல்லது "நித்திய ஜீவன்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "ஆவிக்குரிய வாழ்க்கையின்" கருத்து "தேவனுடைய ஆவியின் மூலம் நம்மை உயிரோடு ஆக்குகிறது" அல்லது "தேவனுடைய ஆவியின் மூலம் புதிய வாழ்வு" அல்லது "நம் உள்ளத்தில் உயிருடன் உயிர்பெற்று" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • சூழ்நிலையைப் பொறுத்து, "உயிரை கொடுக்க" என்ற வார்த்தை "வாழ்ந்துகொள்வதற்கு" அல்லது "நித்திய ஜீவனைக் கொடுக்கும்" அல்லது "நித்தியமாக வாழ வேண்டும்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: மரணம், நித்தியமான)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 1:10 எனவே தேவன் மண்ணை எடுத்து, அதை ஒரு மனிதனாக உருவாக்கி, அவனுக்குள் ஜீவ சுவாசத்தை ஊதினார்.
  • 3:1 நீண்ட காலத்திற்குப் பிறகு, உலகில் பலர் வாழ்ந்தார்கள்.
  • 8:13 யோசேப்பின் சகோதரர்கள் வீட்டிற்குத் திரும்பியபோது, ​​யோசேப்பு இன்னும் உயிரோடிருக்கிறான் என்று யாக்கோபிடம் சொன்னார்கள். அதனால் அவன் மகிழ்ச்சியடைந்தான்.
  • 17:9 எனினும், அவரது (தாவீதின்)வாழ்க்கையின் முடிவில் அவர் தேவனுக்கு முன் மோசமாக பாவம் செய்தார்.
  • 27:1 ஒரு நாள் யூதச் சட்டத்தில் நிபுணர் ஒருவர் அவரைச் சோதித்தார்: "போதகரே, நான் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?"
  • 35:5 இயேசு மறுமொழியாக, "நானே உயிர்த்தெழுதல், மற்றும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்றார்.
  • 44:5 "இயேசுவை கொல்லும்படி ரோம ஆளுநரிடம் சொன்னவர் நீதான். நீங்கள் ஜீவாதிபதியைக் கொன்றீர்கள், ஆனால் தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார். "

சொல் தரவு:

  • Strong's: H1934, H2416, H2417, H2421, H2425, H5315, G198, G222, G227, G806, G590