ta_tw/bible/other/death.md

11 KiB

இற, இறக்கிற, இறந்து, இறப்பு, இறப்பு, இறப்புகள், இறப்பு, இறப்பு

வரையறை:

இந்த வார்த்தை உடல் மற்றும் ஆவிக்குரிய மரணத்தை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. உடல் ரீதியாக, அது ஒரு நபரின் உடல் உயிர்வாழ்வதை நிறுத்துவதைக் குறிக்கிறது. ஆவிக்குரிய விதத்தில், பாவிகள் பாவத்தின் காரணமாக பரிசுத்த தேவனிடமிருந்து பிரிக்கப்படுகிறதைக் குறிக்கிறது.

1. சரீர மரணம்

  • "மரணமடைதல்" என்றால் வாழ்க்கையை முடித்துக்கொள்வதாகும். இறப்பு என்பது சரீரப்பிரகாரமான வாழ்வின் முடிவாகும்.
  • ஒரு நபர் இறக்கும்போது அவரின் ஆவி அவரது உடலை விட்டு செல்கிறது.
  • ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபோது, ​​சரீர மரணமானது உலகத்திற்கு வந்தது.
  • "மரணத்திற்கு ஒப்புக்கொடு" என்ற வார்த்தை, ஒருவரைக் கொல்வதற்கு அல்லது கொலை செய்வதைக் குறிக்கிறது, முக்கியமாக ஒரு ராஜா அல்லது வேறு ஒரு ஆட்சியாளர் ஒரு நபரைக் கொலை செய்ய ஒரு கட்டளை கொடுக்கிறார்.

2. ஆன்மீக மரணம்

  • ஆவிக்குரிய மரணம் தேவனிடமிருந்து ஒரு நபரின் பிரிவு ஆகும்.
  • ஆதாம் தேவனுக்குக் கீழ்ப்படியாமல்போனதினால் ஆவிக்குரிய விதத்தில் மரணமடைந்தார். தேவனுடனான அவரது உறவு முறிந்தது. அவர் வெட்கமாகி தேவனிடமிருந்து தன்னை மறைக்க முயன்றார்.

ஆதாமின் ஒவ்வொரு சந்ததியும் ஒரு பாவியாகவும், ஆவிக்குரிய விதத்தில் மரித்தவராகவும் இருக்கிறார். இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது தேவன் நம்மை மீண்டும் ஆன்மீக ரீதியில் உயிர்ப்பிக்கிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த வார்த்தையை மொழிபெயர்ப்பதற்கு, இலக்கு மொழியில் மரணத்தை குறிக்கும் அன்றாட, இயற்கையான வார்த்தை அல்லது வெளிப்பாடு ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.
  • சில மொழிகளில், "இறக்க" என்பதை "வாழ முடியாது” என்ற அர்த்தத்தில் இருக்கலாம்." "இறந்தவர்" என்ற வார்த்தை "உயிரோடு இல்லை" அல்லது "எந்தவொரு வாழ்க்கையையும் கொண்டிருக்கவில்லை" அல்லது "உயிருடன் இல்லை" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • பல மொழிகளில் மரணத்தை விவரிக்க உருவக வெளிப்பாடுகள் பயன்படுத்த, ஆங்கிலத்தில் இருப்பது போன்ற "கடந்துசென்ற” என்ற பதத்தைப் பயன்படுத்தலாம். இருப்பினும், வேதாகமத்தில், தினந்தோறும் பயன்படுத்தப்படுகிற மொழியில் மரணத்தைக் குறிக்கும் நேரடியான வார்த்தையை பயன்படுத்துவது சிறந்தது.
  • வேதாகமத்தில், சரீரப்பிரகாரமான வாழ்க்கையும் மரணமும் பெரும்பாலும் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் ஒப்பிடப்படுகிறது. சரீரப்பிரகாரமான இறப்பு மற்றும் ஆவிக்குரிய மரணம் ஆகிய இரண்டிற்கும் ஒரே வார்த்தை அல்லது சொற்றொடரைப் பயன்படுத்துவது மொழிபெயர்ப்பில் முக்கியம்.
  • சில மொழிகளில், " ஆவிக்குரிய மரணம்" என்பதை தெளிவாக மொழிபெயர்க்க பின்னணியம் தேவைப்படுகிறது. சில மொழிபெயர்ப்பாளர்கள், ஆன்மீக மரணத்திற்கு முரணாக உள்ள சூழல்களில் "உடல் ரீதியான மரணம்" என்று சொல்வது சிறந்தது என்று நினைக்கலாம்.
  • "மரித்தவர்கள்" என்ற வார்த்தை பெயரிடப்பட்ட பெயரடை ஆகும், அது இறந்த மக்களை குறிக்கிறது. சில மொழிகள் இதை "மரித்தவர்கள்" அல்லது "இறந்த மக்களாக" மொழிபெயர்க்கும். (பார்க்கவும்: பெயரிடைச்சொல்
  • "கொலை செய்யப்படுதல்" என்ற சொற்றொடர் "கொல்லப்படுதல்" அல்லது "கொலை செய்தல்" அல்லது "மரணத்தை நிறைவேற்றுதல்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: விசுவாசம், நம்பிக்கை, வாழ்க்கை, ஆவி)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 1:11 ஆதாமிடம் தேவன் நன்மை தீமை அறியத்தக்க மரத்திலிருந்து தவிர மற்ற எல்லா மரத்தின் கனியை சாப்பிடலாம் என்று சொன்னார். இந்த மரத்திலிருந்து சாப்பிட்டால், அவன் மரணமடைவான் என்று கூறினார்.
  • 2:11 "பின்னர் நீங்கள் மரணமடைவீர்கள், உங்கள் உடல் மண்ணுக்குத் திரும்பும்."
  • 7:10 ஈசாக்கு மரணமடைந்தார் யாக்கோபு மற்றும் ஏசா அவரை அடக்கம் செய்தார்கள்.
  • 37:5 "இயேசு மறுமொழியாக," நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன் என்றார். என்னை நம்புகிறவன் எவனோ, அவன் மரித்தாலும், அவன் உயிரோடிருக்கிறான். என்னை நம்புவோர் அனைவருமே மரணமடைவதில்லை. "
  • 40:8 அவரது மரணத்தின் மூலம், ஜனங்கள் தேவனிடம் வர ஒரு வழியைத் திறந்தார்.
  • 43:7 "இயேசு மரித்தபின், தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார்."
  • 48:2 அவர்கள் பாவம் செய்ததால், பூமியில் உள்ள அனைவருக்கும் வியாதி வந்தது மற்றும் அனைவருக்கும் மரணமடைகின்றனர் .
  • 50:17 அவர் (இயேசு) ஒவ்வொருவரின் கண்ணீரையும் துடைத்துவிடுவார், இனிமேலும் துன்பம், துக்கம், அழுகை, தீங்கு, வலி, மரணம் இருக்காது.

சொல் தரவு:

  • Strong's: H6, H1478, H1826, H1934, H2491, H4191, H4192, H4193, H4194, H4463, H5038, H5315, H6297, H6757, H7496, H7523, H8045, H8546, H8552, G336, G337, G520, G581, G599, G615, G622, G684, G1634, G1935, G2079, G2253, G2286, G2287, G2288, G2289, G2348, G2837, G2966, G3498, G3499, G3500, G4430, G4880, G4881, G5053, G5054