ta_tw/bible/kt/believe.md

15 KiB

விசுவாசி, விசுவாசிக்கிறான், விசுவாசித்தான்,விசுவாசி, அவிசுவாசி, அவிசுவாசிகள் # அவிசுவாசம்

விளக்கம்:

"நம்பிக்கை" மற்றும் "நம்பிக்கை வைத்தல்" ஆகிய சொற்கள் நெருக்கமாக தொடர்புடையவை, ஆனால் சற்று வித்தியாசமான அர்த்தங்கள் உள்ளன:

1. நம்புதல்

  • ஒரு காரியத்தை உண்மை என்று ஏற்றுக்கொள்வது அல்லது நம்புவது விசுவாசித்தல் ஆகும்.
  • ஒருவர் சொன்னது உண்மைதான் என்பதை யாராவது சொன்னதை வைத்து நம்புவதாகும்.

2. நம்பிக்கை வைத்தல்

  • ஒருவரிடம் "நம்பிக்கைவைத்தல்" என்றால் அந்த நபரை "நம்புகிறோம்" என்று அர்த்தம். அந்த நபர் அவர் தான் என்று கூறுகிறார், அவர் எப்பொழுதும் சத்தியத்தை பேசுகிறார், மேலும் அவர் என்ன வாக்குறுதி கொடுத்தாரோ அதை நிறைவேற்றுவார் என்று நம்புவதாகும்.
  • ஒரு நபர் உண்மையிலேயே எதையாவது நம்புகிறாரோ அவர் அந்த நம்பிக்கையை காண்பிக்கும் விதத்தில் செயல்படுவார்.
  • "விசுவாசம் வைத்தல் "என்ற சொற்றொடர் வழக்கமாக "நம்பிக்கை வைத்தல்" என்ற அதே அர்த்தம் கொண்டுள்ளது.
  • "இயேசுவை விசுவாசிப்பது" என்பது அவர் தேவனுடைய குமாரன் என்றும், அவர் மனிதனாகவும், நம்முடைய பாவங்களுக்காக செலுத்த வேண்டிய தியாகம் செய்து மரித்தவராகவும் இருக்கிறார் என்று நம்புவதாகும். இது அவரை இரட்சகராக நம்புவதோடு அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வாழ்வதாக இருக்கும்.

வேதாகமத்தில், "விசுவாசி" என்ற வார்த்தை இயேசு கிறிஸ்துவை இரட்சகராக நம்புகிறவர் மற்றும் நம்புகிற ஒருவரைக் குறிப்பிடுகிறது.

  • "விசுவாசி" என்ற வார்த்தையின் அர்த்தம் "நம்புகிற நபர்". என்பதாகும்.
  • "கிறிஸ்தவர்" என்ற வார்த்தை விசுவாசிகளுக்கு முக்கிய வார்த்தையாக மாறியது, ஏனென்றால் அவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்து அவருடைய போதனைகளைக் கடைப்பிடிப்பதைக் குறிக்கிறது.

"அவிசுவாசம்" என்ற வார்த்தை, எதையாவது அல்லது யாராவது நம்பவில்லை என்பதைக் குறிக்கிறது.

  • வேதாகமத்தில், "அவிசுவாசம்" என்பது ஒரு நபர் இயேசுவை இரட்சகர் என்று விசுவாசிகாமல் குறிக்கிறது.
  • இயேசுவை விசுவாசிக்காத ஒருவர் "அவிசுவாசி" என்று அழைக்கப்படுகிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "விசுவாசிப்பது என்பது "உண்மை என்று அறியப்பட்டது" அல்லது "சரி என்று அறியப்பட்டது " என மொழிபெயர்க்கப்படலாம்.

  • "விசுவாசம்" வைத்தல் என்பது "முழுமையாக நம்பிக்கை வைத்தல்” அல்லது "நம்பிக்கை மற்றும் கீழ்ப்படிதல்" அல்லது "முழுமையாக நம்புவதும், பின்பற்றுவதும்" என மொழிபெயர்க்கப்படலாம்.

  • சில மொழிபெயர்ப்புகள் "இயேசுவில் விசுவாசி" அல்லது "கிறிஸ்துவில் விசுவாசி" என்ற வார்த்தைகளை பயன்படுத்த விரும்பலாம்.

  • இந்த வார்த்தையை "இயேசுவை நம்புகிறவர்" அல்லது "இயேசுவை அறிந்தவர், அவருக்காக வாழ்கிறவர்" என்று பொருள்படும் வார்த்தை அல்லது சொற்றொடர் மூலமாகவும் மொழிபெயர்க்கப்படலாம்.

  • "விசுவாசி" என்பதை மொழிபெயர்ப்பதற்கான மற்ற வழிகள் "இயேசுவைப் பின்பற்றுபவர்" அல்லது "இயேசுவை அறிந்திருக்கிறவர்கள், அவருக்குக் கீழ்ப்படிகிறவர்கள்" என்று இருக்கலாம்.

  • "விசுவாசி" என்பது கிறிஸ்துவில் இருக்கும் எந்த ஒரு விசுவாசிக்கும் பொதுவான வார்த்தையாகும், அதே சமயத்தில் "இயேசு உயிரோடிருந்தபோது அவரை அறிந்திருந்த மக்களுக்கு "சீஷன்" மற்றும் "அப்போஸ்தலன்" என்று இன்னும் குறிப்பாகப் பயன்படுத்தப்பட்டன. இந்த வார்த்தைகளை வித்தியாசப்படுத்த அவற்றை வெவ்வேறு வழிகளில் மொழிபெயர்ப்பது சிறந்தது,

  • "அவிசுவாசத்தை" மொழிபெயர்க்கும் மற்ற வழிகள் "விசுவாசமின்மை" அல்லது "நம்பாதவை" ஆகியவை அடங்கும்.

  • "அவிசுவாசி” என்ற வார்த்தை "இயேசுவை விசுவாசிக்காதவர்" அல்லது "இயேசுவை இரட்சகராக நம்பாத ஒருவர்" என மொழிபெயர்க்கப்படலாம்.

(மேலும் காண்க: நம்பிக்கை, அப்போஸ்தலன், கிறிஸ்தவன், சீஷன், விசுவாசம், நம்பிக்கை)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 3:4 வரப்போகும் வெள்ளப் பெருக்கு பற்றி நோவா மக்களுக்கு எச்சரிக்கை செய்தார், தேவனிடம் திரும்பும்படி அவர்களிடம் சொன்னார், ஆனால் அவர்கள் அவரை விசுவாசிக்கவில்லை.
  • 4:8 ஆபிராம் தேவனின் வாக்குத்தத்தத்தை விசுவாசித்தார். ஆபிராம் நீதிமானாக இருப்பதாக தேவன் அறிவித்தார், ஏனென்றால் தேவனுடைய வாக்குத்தத்தத்தை அவர் விசுவாசித்தார்.
  • 11:2 தேவன் தம்மை யாரெல்லாம்விசுவாசித்தார்களோஅவர்களின் முதற்பேறானகுழந்தையைக் காப்பாற்ற ஒரு வழியை காட்டினார்.
  • 11:6 ஆனால் எகிப்தியர்கள் தேவனை நம்பவில்லை அல்லது அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.
  • 37:5 இயேசு மறுமொழியாக, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன். என்னில் விசுவாசம் வைக்கிறவன் எவனோ அவன் வாழ்வான், அவன் மரித்தாலும் பிழைப்பான். என்னிடம் விசுவாசம் உள்ளவர்கள் அனைவரும் ஒருபோதும் மரிக்க மாட்டார்கள். நீங்கள் இதை நம்புகிறீர்களா? "
  • 43:1 இயேசு பரலோகத்திற்குப் போன பிறகு, சீஷர்கள்இயேசு தங்களுக்குக் கட்டளையிட்டிருந்தபடியே எருசலேமில் தங்கியிருந்தார்கள். __ விசுவாசிகள், தொடர்ந்து ஜெபிக்கக் கூடிவந்தனர்.
  • 43:3 விசுவாசிகள் ஒன்றாகக் கூடியிருக்கும்போது, திடீரென்று அவர்கள் கூடியிருந்த வீடு பலத்த காற்றின் சத்தத்தால் நிறைந்தது. பின்னர் தீப்பிழம்புகள் போல தோற்றமளிக்கும் அக்கினியானது எல்லா விசுவாசிகளின் தலையின்மேலும் காணப்பட்டது.
  • 43:13 ஒவ்வொரு நாளும், அதிகமான மக்கள் விசுவாசிகள் ஆனார்கள்.
  • 46:6 எருசலேமில் அநேக ஜனங்கள் இயேசுவின் சீஷர்களைத் துன்புறுத்த ஆரம்பித்தார்கள். அதனால் விசுவாசிகள் மற்ற இடங்களுக்கு ஓடிப்போனார்கள். இருந்தபோதிலும், அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் இயேசுவைப் பற்றிப் பிரசங்கித்தார்கள்.
  • 46:1 சவுல் ஸ்தேவானைக் கொன்ற ஆண்கள் அணிந்திருந்த ஆடைகளை காத்துக்கொண்டிருந்த இளைஞன் ஆவான். அவர் இயேசுவை நம்பவில்லை, எனவே அவர் சீஷர்களைத் துன்புறுத்தினார்.
  • 46:9 எருசலேமிலிருந்த துன்புறுத்தலில் இருந்து தப்பி ஓடி வந்த சிலர், தூரத்திலிருந்த அந்தியோகியா பட்டணத்திற்கு வந்தபோது அங்கு இயேசுவைப் பற்றிப் பிரசங்கித்தார்கள். அது அந்தியோகியாவில் இருந்த விசுவாசிகள் முதன் முதலில் "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.
  • 47:14 அவர்கள் தேவாலயங்களில் விசுவாசிகளை ஊக்குவிக்க மற்றும் கற்பிக்க பல கடிதங்கள் எழுதினார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H539, H540, G543, G544, G569, G570, G571, G3982, G4100, G4102, G4103, G4135