ta_tw/bible/kt/apostle.md

6.4 KiB

அப்போஸ்தலன், அப்போஸ்தலர்கள், அப்போஸ்தலப்பட்டம்

வரையறை:

தேவனையும் அவருடைய ராஜ்யத்தையும் பற்றி பிரசங்கிப்பதற்காக இயேசுவால் அனுப்பப்பட்டவர்கள் "அப்போஸ்தலர்கள்" ஆவர். "அப்போஸ்தலப்பட்டம்" என்ற வார்த்தை அப்போஸ்தலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைப் பற்றியும் அவர்களுடைய அதிகாரத்தையும் குறிக்கிறது.

  • "அப்போஸ்தலன்" என்ற வார்த்தை "விசேஷ நோக்கத்திற்காக அனுப்பப்படுகிறவர்" என்பதாகும். அப்போஸ்தலன் என்பவன் தன்னை அனுப்பியவரின் அதே அதிகாரத்தை உடையவனாக இருக்கிறான்.
  • இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான பன்னிரண்டு சீஷர்கள் முதல் அப்போஸ்தலர்களாக மாறினார்கள். பவுல், யாக்கோபு போன்ற மற்ற மனிதர்களும் அப்போஸ்தலர்களாக ஆனார்கள்.
  • தேவனுடைய வல்லமையால், அப்போஸ்தலர்கள் தைரியமாக நற்செய்தியைப் பிரசங்கித்து மக்களை குணப்படுத்த முடிந்தது; பிசாசுகளை மக்களிடமிருந்து வெளியேற்ற முடிந்தது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "அப்போஸ்தலன்" என்ற வார்த்தையை ஒரு வார்த்தையுடன் அல்லது சொற்றொடருடன்"வெளியே அனுப்பப்படும் ஒருவர்" அல்லது "அனுப்பப்பட்டவர்" அல்லது "கடவுளுடைய செய்தியை மக்களுக்கு அறிவிப்பதற்காகவும், பிரசங்கிக்கவும் அழைக்கப்படுபவர்" என்றும் அர்த்தம்கொள்ளும் விதமாக . மொழிபெயர்க்கலாம்.
  • பல்வேறு வழிகளில் "அப்போஸ்தலன்" மற்றும் "சீஷர்" என்ற வார்த்தைகளை மொழிபெயர்க்கவேண்டியது முக்கியம்.
  • உள்ளூர் அல்லது தேசிய மொழியில் வேதாகம மொழிபெயர்ப்பில் இந்த வார்த்தைஎப்படி மொழிபெயர்க்கப்பட்டது என்பதைக் கவனியுங்கள். (பார்க்கதெரியாதவைகளை எப்படி மொழிபெயர்ப்பது

(மேலும் காண்க: அதிகாரம், சீஷர், யாக்கோபு (செபெதேயுவின் மகன்) , பவுல், பன்னிரண்டுபேர்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 26:10 பின்னர் இயேசு அவருடைய அப்போஸ்தலர்கள் என்று அழைக்கப்பட்ட பன்னிரண்டு நபர்களைத் தேர்ந்தெடுத்தார். __ அப்போஸ்தலர்கள் இயேசுவுடன் பயணம் செய்து அவரிடமிருந்து கற்றுக்கொண்டனர்.
  • 30:1 பல கிராமங்களில் மக்களுக்கு பிரசங்கிக்கவும், மக்களுக்கு போதிக்கவும் இயேசு தம்முடைய __ அப்போஸ்தலர்களை அனுப்பினார்.
  • 38:2 யூதாஸ் இயேசுவின் __ அப்போஸ்தலர்களில் ஒருவன் ஆவான். அவர் __ அப்போஸ்தலர்களின் '__ பணப்பைக்குப் பொறுப்பாக இருந்தார், ஆனால் அவர் பணத்தை நேசித்தார் மற்றும் அடிக்கடி அந்தப் பையில் இருந்து திருடினார்.
  • 43:13 சீஷர்கள் __ அப்போஸ்தலர்களுடைய __ போதனைகள், ஐக்கியம், ஒன்றாக சாப்பிடுவது, மற்றும் ஜெபத்திற்கு தங்களை அர்ப்பணித்தார்கள்.
  • 46:8 அப்பொழுது பர்னபா என்னும் ஒரு விசுவாசி சவுலை அப்போஸ்தலர்களிடம் அழைத்துச் சென்று, ​​சவுல் தமஸ்குவில் தைரியமாகப் பிரசங்கித்ததை அவர்களிடம் சொன்னார்.

சொல் தரவு:

  • Strong's: G651, G652, G2491, G5376, G5570