ta_tw/bible/kt/authority.md

4.7 KiB

அதிகாரம், அதிகாரிகள்

வரையறை:

"அதிகாரம்" என்ற வார்த்தை செல்வாக்கு மற்றும் இன்னொருவர் மேல் செலுத்தும் கட்டுப்பாடு நிறைந்த அதிகாரத்தைக் குறிக்கிறது.

  • இராஜாக்கள் மற்றும் பிற ஆளும் ஆட்சியாளர்கள் ஆட்சி செய்யும் மக்கள் மேல் அதிகாரம் பெற்றிருக்கிறார்கள்.
  • "அதிகாரிகள்" என்ற வார்த்தை, மற்றவர்களிடம் அதிகாரம் கொண்ட மக்கள், அரசாங்கங்கள் அல்லது அமைப்புகளை குறிக்கலாம்.
  • "அதிகாரிகள்" என்ற வார்த்தை, தேவனுடைய அதிகாரத்திற்குக் கீழ்ப்படியாத மக்கள்மேல் அசுத்த ஆவிகள் கொண்டிருக்கும் ஆற்றலைக் குறிக்கலாம்.
  • எஜமான்களுக்கு தங்கள் வேலைக்காரர்கள் அல்லது அடிமைகள் மீது அதிகாரம் உண்டு. பெற்றோர்களுக்கு தங்கள் குழந்தைகள்மீது அதிகாரம் உண்டு.
  • அரசாங்கங்களுக்கு தங்கள் குடிமக்களை நிர்வகிக்கும் சட்டங்களை உருவாக்க அதிகாரம் அல்லது உரிமை உண்டு.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "அதிகாரம்" என்ற வார்த்தையை "கட்டுப்பாட்டு" அல்லது "உரிமை" அல்லது "தகுதிகள்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • சில நேரங்களில் "அதிகாரம்" என்பது "சக்தி" என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.
  • "அதிகாரம் என்பது" மக்களை ஆளும் மக்களை அல்லது நிறுவனங்களை குறிக்க பயன்படுத்தப்படுகையில், அது "தலைவர்கள்" அல்லது "ஆட்சியாளர்கள்" அல்லது "வல்லமைகள்" என்றும் மொழிபெயர்க்கப்படலாம்.
  • "தனது சொந்த அதிகாரத்தால்" என்ற சொற்றொடர் "தன்னுடைய சொந்த உரிமையுடன்" அல்லது "தனது சொந்த தகுதிகளை அடிப்படையாகக் கொண்டது" எனவும் மொழிபெயர்க்க முடியும்.
  • "அதிகாரத்தின் கீழ்" என்ற சொற்றொடரை "கீழ்ப்படிய வேண்டும்" அல்லது "மற்றவர்களின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்" என மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: குடிமகன், கட்டளை, கீழ்ப்படி, சக்தி, ஆட்சியாளர்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H8633, G831, G1413, G1849, G1850, G2003, G2715, G5247