ta_tw/bible/other/citizen.md

2.7 KiB

குடிமகன், குடிமக்கள், குடியுரிமை

வரையறை:

ஒரு குடிமகன் ஒரு குறிப்பிட்ட நகரத்தில், நாட்டில், அல்லது ராஜ்யத்தில் வசிக்கிற ஒருவர். அந்த இடத்தின் சட்டபூர்வமான குடிமகனாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படும் ஒருவரை குறிப்பாக இது குறிக்கிறது.

  • சூழலை பொறுத்து, இது "வசிப்பவர்" அல்லது "அதிகாரப்பூர்வ குடியுரிமை பெற்றவர்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • ஒரு ராஜா, பேரரசர் அல்லது மற்ற ஆட்சியாளரால் நிர்வகிக்கப்படும் ஒரு பெரிய ராஜ்யம் அல்லது பேரரசின் பகுதியாக இருக்கும் ஒரு பிராந்தியத்தில் ஒரு குடிமகன் வாழலாம். உதாரணமாக, பவுல் பல மாகாணங்களைக் கொண்டிருந்த ரோமானிய பேரரசின் குடிமகன்; பவுல் அந்த மாகாணங்களில் ஒன்றில் வாழ்ந்தார்.
  • ஒரு உருவக அர்த்தத்தில், இயேசுவின் விசுவாசிகள் பரலோகத்தின் "குடிமக்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள், அவர்கள் ஒரு நாள் அங்கு வாழ்வார்கள். ஒரு நாட்டின் குடிமகனைப்போல கிறிஸ்தவர்கள் தேவனுடைய ராஜ்யத்திற்குரியவர்கள்.

(காண்க: இராஜ்ஜியம், பவுல், மாகாணம், ரோம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H6440, G4175, G4177, G4847