ta_tw/bible/names/rome.md

4.1 KiB

ரோம், ரோமன்

உண்மைகள்:

புதிய ஏற்பாட்டு காலங்களில், ரோமானியப் பேரரசின் மையமாக ரோம நகரம் இருந்தது. இப்போது அது இத்தாலியின் நவீன நாட்டிற்கு தலைநகராக உள்ளது.

  • ரோம சாம்ராஜ்யம் மத்தியதரைக் கடல் முழுவதிலும் உள்ள எல்லா பகுதிகளிலும் இஸ்ரவேல் உட்பட ஆட்சி செய்தது.
  • ரோமானிய அரசாங்கம் மற்றும் ரோம அதிகாரிகள் உட்பட ரோமில் அரசாங்கத்தை கட்டுப்படுத்தும் பிராந்தியங்களுடனான எதையும் "ரோமானியம்" என்று குறிப்பிடுகின்றனர்.
  • அப்போஸ்தலனாகிய பவுல் ரோமாபுரிக்கு கைதிகளாக அழைத்துச் செல்லப்பட்டார்; ஏனெனில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கித்தார்.
  • "ரோமர்" என்ற புதிய ஏற்பாட்டு புத்தகம் ரோமில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் எழுதிய கடிதம்.

(மேலும் காண்க: நல்ல செய்தி, கடல், பிலாத்து, பவுல்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 23:4 குழந்தையைபெற்றெடுக்க மரியாளுக்கு நேரம் வந்தபோது, ரோம அரசாங்கம் ஒவ்வொருவரும் தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த இடத்திற்க்குச் சென்று பெயரை பதிவு செய்ய கட்டளை கொடுத்தது.
  • 32:6 பிறகு இயேசு பிசாசைப் பார்த்து, "உன் பெயர் என்ன?" அவர் சொன்னார், "என் பெயர் லேகியோன், ஏனென்றால் நாங்கள் பல." (ஒரு "படையணி" ரோம_ இராணுவத்தில் பல ஆயிரம் வீரர்களின் குழு இருந்தது.)
  • 39:9 மறுநாள் அதிகாலையில், யூத தலைவர்கள் இயேசுவை ரோம ஆளுநரான பிலாத்துவிடம் அழைத்துவந்து கொலை செய்யும்படி கூறினர்.
  • 39:12 ரோம_ படைவீரர்கள் இயேசுவைத் சவுக்கால் அடித்தார்கள்; அவருக்கு ஒரு ராஜ அங்கியை அணிவித்து கிரீடத்தையும் சூட்டினர். அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: யூதருடைய ராஜாவா என்றார்கள்.

சொல் தரவு:

  • Strong's: G4514, G4516