ta_tw/bible/names/paul.md

7.5 KiB

பவுல், சவுல்

உண்மைகள்:

அநேக மக்கள் குழுக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க இயேசு அனுப்பிய ஆரம்பகால சபைத் தலைவராக பவுல் இருந்தார்.

  • பவுல் ரோம நகரமான தர்சுவிலே பிறந்த ஒரு யூதர், ஆகவே ரோம குடிமகனாக இருந்தார்.
  • பவுல் முதலில் யூத பெயரான சவுல் என்ற பெயரால் அழைக்கப்பட்டார்.
  • சவுல் யூத மதத் தலைவராகவும், கிறிஸ்தவர்களாக மாறிய யூதர்களை கைது செய்தார். ஏனென்றால் அவர்கள் இயேசுவை விசுவாசிப்பதால் அவர்கள் தேவனை அவமதிகின்றனர் என்று நினைத்தார்.
  • இயேசு ஒரு மிகப்பிரகாசமானமான ஒளியில் சவுலுக்குத் தன்னை வெளிப்படுத்தினார், கிறிஸ்தவர்களைத் தொந்தரவு செய்வதை நிறுத்த சொன்னார்.

சவுல் இயேசுவை விசுவாசித்து, அவரைப் பற்றி தன் சக யூதர்களைப் போதிக்க ஆரம்பித்தார்.

  • பிற்பாடு, இயேசுவைப் பற்றி யூத அல்லாதவர்களுக்குப் போதிக்க சவுலை தேவன் அனுப்பினார்; ரோமானிய பேரரசின் வெவ்வேறு நகரங்களிலும் மாகாணங்களிலும் சபைகளை ஆரம்பித்தார். இந்த நேரத்தில் ரோமானியப் பெயரால் பவுல் அழைக்கப்பட்டார்.
  • இந்த நகரங்களில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தவும் கற்பிக்கவும் கடிதங்கள் எழுதினார். இந்த கடிதங்கள் பல, புதிய ஏற்பாட்டில் உள்ளன.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: கிறிஸ்தவன், யூத தலைவர்கள், ரோமாபுரி)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 45:6 ஸ்தேவானைக் கொலை செய்வதற்கு மக்களுடன் சவுல் என்ற பெயருடைய ஒரு இளைஞன் ஒப்புக்கொண்டார். மேலும் கல்லெறியும் மக்களின் உடைகளை காத்தார்.
  • 46:1 சவுல் ஸ்தேவானைக் கொன்ற ஆண்கள் அணிந்திருந்த உடைகளைக் காத்துக்கொண்டிருந்த இளைஞர் ஆவார். அவர் இயேசுவை நம்பவில்லை, அதனால் அவர் விசுவாசிகள் துன்புறுத்தினார்.
  • 46:2 சவுல்_ தமஸ்குவுக்குப் போகும் வழியில் பரலோகத்திலிருந்து பிரகாசமான ஒரு ஒளி அவரைச் சுற்றிலும் பிரகாசித்தது. அதனால் அவர் கீழே விழுந்தார், மேலும் சவுலே சவுலே என்று ஒருவர் கூப்பிடும் சத்தத்தைக் கேட்டார். ஏன் என்னைத் துன்புறுத்துகிறாய்? "
  • 46:5 எனவே அனனியா சவுலிடம் சென்றார். அவர்மேல் தம் கைகளை வைத்தார். அவர், "உன் வழியில் உனக்குத் தரிசனமானவராகிய இயேச,, உன் பார்வையை திரும்பப்பெறவும், பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படவும்என்னை அனுப்பினார். " சவுலினால் உடனடியாக மீண்டும் பார்க்க முடிந்தது, மற்றும் அனனியா அவருக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.
  • 46:6 உடனே, சவுல் தமஸ்குவில் இருந்த யூதர்களிடம்: "இயேசு தேவனுடைய குமாரன்!"என்று பிரசங்கிக்க ஆரம்பித்தார்
  • 46:9 பர்னபா மற்றும் சவுல் அங்கு சென்றார் (அந்தியோகியா) இயேசு பற்றி இந்த புதிய விசுவாசிகள் இன்னும் கற்று மற்றும் தேவாலயத்தில் வலுப்படுத்த சென்றனர்.
    • 47:1 சவுல் ரோமப்பேரரசு முழுவதும் பயணம் செய்யும்போது, ரோமப் பெயரான பவுல் என்பதை பயன்படுத்தினார்.
  • 47:14 பவுல் மற்றும் பிற கிறிஸ்தவ தலைவர்கள் பல நகரங்களுக்குப் பயணம் செய்தார்கள், இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு பிரசங்கித்து கற்பித்தார்.

சொல் தரவு:

  • Strong's: G3972, G4569