ta_tw/bible/kt/christian.md

7.0 KiB

கிறிஸ்தவன்

வரையறை:

இயேசு மீண்டும் பரலோகத்திற்குப் போன சில காலத்திற்குப் பிறகு, மக்கள் "கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள்" அதாவது "கிறிஸ்தவர்கள்" என்ற பெயர் கொண்டனர்.

  • இயேசுவின் சீஷர்கள் அந்தியோகியா நகரத்தில் முதன்முதலில் "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கப்பட்டனர்.
  • ஒரு கிறிஸ்தவன் என்பவன், இயேசு தேவனுடைய குமாரன் என்று நம்பி, அவர் தன்னை பாவத்திலிருந்து காப்பாற்றுகிறார் என்று நம்புகிறார்.
  • நம்முடைய நவீன காலங்களில், "கிறிஸ்தவன்" என்ற வார்த்தை கிறிஸ்தவ மதத்துடன் அடையாளம் காட்டுகிற ஒருவருக்கு அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது, ஆனால் உண்மையில் இயேசுவைப் பின்பற்றாதவர். இது வேதாகமத்தில் "கிறிஸ்தவத்தின்" நோக்கம் அல்ல.
  • ஏனெனில், வேதாகமத்தில் "கிறிஸ்தவர்" என்ற வார்த்தை எப்போதுமே இயேசுவை உண்மையிலேயே நம்புகிற ஒருவரை குறிப்பிடுகிறது, ஒரு கிறிஸ்தவர் "விசுவாசி" என்றும் அழைக்கப்படுகிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த வார்த்தையை "கிறிஸ்துவை பின்பற்றுபவர்” பின்பற்றுபவர்" அல்லது "கிறிஸ்து நபர்" போன்ற ஏதாவது ஒன்றை மொழிபெயர்க்கலாம்.
  • சீஷர் அல்லது அப்போஸ்தலருக்குப் பயன்படுத்தப்படும் சொற்களின் மொழிபெயர்ப்பை விட இந்த வார்த்தையின் மொழிபெயர்ப்பு வித்தியாசமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தவும்.
  • இந்த வார்த்தையை இயேசுவை விசுவாசிக்கிற ஒவ்வொரு தனி நபரைக்குறிக்கிறது என்று மொழிபெயர்ப்பதில் கவனமாக இருங்கள்., மாறாக ஒரு குழுவைக் குறிக்கும் வார்த்தை அல்ல.
  • உள்ளூர் அல்லது தேசிய மொழியில் வேதாகமமானது இந்த வார்த்தையை எப்படி மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதைக் கவனியுங்கள். (பார்க்கவும்: தெரியாதவைகளை மொழிபெயர்ப்பது எப்படி)

(மேலும் காண்க: அந்தியோகியா, கிறிஸ்து, சபை, சீஷர், விசுவாசம், இயேசு, தேவனுடைய குமாரன்)

வேதாகமக் குறிப்புகள்:

பைபிள் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 46:9 இயேசுவின் விசுவாசிகள் முதலில் அந்தியோகியாவில் "கிறிஸ்தவர்கள்" என்று அழைக்கப்பட்டார்கள்.
  • 47:14 பவுல் மற்றும் மற்ற கிறிஸ்தவ தலைவர்கள் பல நகரங்களுக்குப் பயணம் செய்தார்கள், இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மக்கள் பிரசங்கித்து கற்பித்தனர்.
  • 49:15 நீங்கள் இயேசுவையும் அவர் உங்களுக்கு என்ன செய்தாரோ அவைகளை விசுவாசித்தால், நீங்கள் ஒரு கிறிஸ்தவர்!
  • 49:16 நீங்கள் ஒரு கிறிஸ்தவர் என்றால், இயேசு செய்தவற்றின் காரணமாக தேவன் உங்கள் பாவங்களை மன்னித்துவிட்டார்.
  • 49:17 நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருப்பினும்கூட, நீங்கள் இன்னும் பாவம் செய்ய சோதிக்கப்படுவீர்கள்.
  • 50:3 இயேசு பரலோகத்திற்குத் திரும்புவதற்கு முன்பாக, ஒருபோதும் கேள்விப்படாத மக்களுக்கு நற்செய்தியை அறிவிக்க இயேசு கிறிஸ்தவர்களுக்கு சொன்னார்.
  • 50:11 இயேசு திரும்பி வரும்போது, ​​மரித்த ஒவ்வொரு கிறிஸ்தவனும் மரித்தோரிலிருந்து எழுந்து வானத்தில் அவரை சந்திப்பான்.

சொல் தரவு:

  • Strong's: G5546