ta_tw/bible/names/antioch.md

3.4 KiB

அந்தியோகியா

தகவல்கள்:

அந்தியோகியா என்பது புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இரண்டு நகரங்களின் பெயர்களாகும். ஒன்று சிரியாவில் மத்திய தரைக்கடல் கரையின் அருகில் இருந்தது, மற்றொன்று ரோம மாகாண எல்லைக்குட்பட்ட கொலோசிய பட்டணத்தின் அருகில் இருந்தத பிசிதியாவாகும்.

  • சிரியாவின் அந்தியாகியா ஸ்தல சபையில் கிறிஸ்துவை பின்பற்றின விசுவாசிகளை முதன் முதலில் “கிறிஸ்துவர்கள்” என்று அழைத்தனர். அங்கிருந்த சபை புறஜாதி மக்களுக்கு ஊழியம் செய்ய மிஷினரிகளை உற்சாகமாய் அனுப்பினர்..
  • சிரியாவின் அந்தியாகியோ சபைக்கு எருசலேமின் சபைத் தலைவர்கள் அவர்கள் கிறிஸ்தவர்களாக வாழ்வதற்கு யூத மத சட்டங்களை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்று கடிதம் எழுதினர்.
  • பவுல். பர்னபா மற்றும் யோவான் மாற்கு பிசிதியாவின் அந்தியோகியா பிரயாணம் செய்து சுவிஷேசம் அறிவித்தனர். . பிற நகரங்களிருந்து வந்த சில யூதர்கள் அங்கு பிரச்சினைகளை தூண்டிவிட்டு, பவுலை கொலை செய்ய முயற்சித்தனர். ஆனால் பல பிற மக்களும், யூதர்களும் புறஜாதியினரும், போதனைகளை கேட்டு இயேசுவை விசுவாசித்தனர்.

(மொழிப்பெயர்ப்பு சிபாரிசிகள்: பெயர்களை எப்படி மொழிப்பெயர்ப்பது

(மேலும் பார்க்க:பர்னபா, கொலோசே, யோவான் மாற்கு, பவுல், மாகாணம், ரோம், சிரியா)

வேத குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G491