ta_tw/bible/names/colossae.md

2.9 KiB

கொலோசெ, கொலோசெயன்

உண்மைகள்:

புதிய ஏற்பாட்டு காலங்களில், கொலோசே என்பது ரோமானிய மாகாணமான பிரிகியாவில் அமைந்துள்ள ஒரு நகரம், இப்போது தென்மேற்கு துருக்கி என்ற நிலப்பகுதியில் அமைந்துள்ளது. கொலோசெயாவில் வசித்த மக்கள் கொலோசியர்கள் ஆவார்கள்.

  • மத்தியதரைக் கடல் வழியாக சுமார் 100 மைல் தூரத்தில் அமைந்திருந்த கொலோசெ எபேசு நகரத்திற்கும் யூப்ரடீஸ் நதிக்கும் இடையேயான ஒரு முக்கிய வியாபார பாதையாக இருந்தது.
  • பவுல், ரோமில் சிறையில் இருந்தபோது, ​​கொலோசெயில் விசுவாசிகளிடையே காணப்பட்ட பொய் போதனைகளை திருத்தும்படி "கொலோசியருக்கு" ஒரு கடிதம் எழுதினார்.
  • இந்தக் கடிதத்தை அவர் எழுதியபோது பவுல் கொலோசெயில் இருந்த சபையை பார்த்திருக்கவில்லை, ஆனால் அவருடைய சக ஊழியரான எப்பாப்பிராவிடமிருந்து விசுவாசிகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார்.
  • எப்பாப்பிரா கிறிஸ்தவ ஊழியராக இருந்தார், அவர் கொலோசெயில் சபையை ஆரம்பித்தார்.
  • பிலேமோன் புத்தகம் கொலோசெயில் இருந்த ஒரு அடிமை உரிமையாளருக்கு பவுல் எழுதிய கடிதம் ஆகும்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: எபேசு, பவுல்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: G2857, G2858