ta_tw/bible/names/syria.md

2.9 KiB

சிரியா

உண்மைகள்:

சிரியா இஸ்ரேலின் வடகிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடு. புதிய ஏற்பாட்டின் காலப்பகுதியில், ரோம சாம்ராஜ்யத்தின் ஆட்சியின் கீழ் ஒரு மாகாணமாக இருந்தது.

  • பழைய ஏற்பாட்டின் காலத்தில், சீரியர்கள் இஸ்ரவேலரின் வலிமையான இராணுவ எதிரிகள்.

நாகமான் சிரிய இராணுவத்தின் தளபதியாக இருந்தார், அவருடைய குஷ்டரோகத்தை எலிசா தீர்க்கதரிசி குணப்படுத்தினார்.

  • சிரியாவிலுள்ள அநேகர், நோவாவின் குமாரனாகிய சேமின் சந்ததியாரான ஆராமின் சந்ததியினர்.
  • சிரியாவின் தலைநகரான தமஸ்கு வேதாகமத்தில் பல முறை குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுல் அங்கு தமஸ்கு நகரத்திற்குச் சென்றார். அங்கே கிறிஸ்தவர்களைத் துன்புறுத்துவதற்கான திட்டங்களைத் தொடங்கினார். ஆனால் இயேசு அவரை நிறுத்திவிட்டார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: ஆராம், தளபதி, தமஸ்கு, சந்ததி, எலிசா, தொழுநோய், நாகமான், துன்புறுத்துதல், தீர்க்கதரிசி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H130, H726, H758, H761, H762, H804, H1834, H4601, H7421, G4947, G4948