ta_tw/bible/other/persecute.md

6.0 KiB

துன்புறுத்து, துன்புறுத்தப்பட்ட, துன்புறுத்தல், துன்புறுத்துதல், துன்புறுத்தல்கள், துன்புறுத்துபவர், துன்புறுத்துபவர்கள்

வரையறை:

"துன்புறுத்து" மற்றும் "துன்புறுத்தல்" என்ற சொற்கள் ஒரு நபரை அல்லது ஒரு குறிப்பிட்ட குழுவினரைத் தீங்கு விளைவிக்கும் கடுமையான முறையில் தொடர்ந்து நடத்துவதைக் குறிக்கின்றன.

  • துன்புறுத்தல் என்பது ஒரு நபர் அல்லது பலருக்கு எதிராக இருக்கலாம், பொதுவாக தொடர்ச்சியான, தாக்குதல்களை உள்ளடக்கியது.
  • இஸ்ரவேல் மக்கள் பலரால் தாக்கப்பட்டார்கள், , அவர்களைக் கைப்பற்றினர், துரத்தினர். அதனால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள்.
  • வெவ்வேறு மத நம்பிக்கைகள் உடையவர்கள் பலவீனமான மற்ற மக்களை அடிக்கடி துன்புறுத்துகிறார்கள்.

யூத மதத் தலைவர்கள் இயேசு போதித்தவற்றை விரும்பாததால் அவரைத் துன்புறுத்தினர்.

  • இயேசு பரலோகத்திற்குச் சென்றபின், யூத மதத் தலைவர்களும் ரோம அரசாங்கமும் அவருடைய சீஷர்களைத் துன்புறுத்தினார்கள்.
  • "துன்புறுத்துதல்" என்ற வார்த்தை "ஒடுக்கப்பட்டதாக" அல்லது "கடுமையாக நடத்தப்பட வேண்டும்" அல்லது "தொடர்ச்சியாக மோசமாக" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "துன்புறுத்துதலை" மொழிபெயர்ப்பதற்கான வழிகள் "கடுமையான தவறான நடத்தையை" அல்லது "அடக்குமுறை" அல்லது "தொடர்ந்து துன்புறுத்தும்படி நடத்தப்படுதல்" ஆகியனவாகும்.

(மேலும் காண்க: கிறிஸ்தவன், சபை, ஒடுக்குமுறை, ரோம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 33:7 "பாறை நிலம் என்பது தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிற ஒரு நபரிக் குறிக்கிறது. ஆனால் அவர் கஷ்டத்தை அனுபவிக்கும் போது அல்லது __ துன்புறுத்தல்__வரும்போது, அவர் விழுந்து விடுகிறார். "
  • 45:6 அந்நாளில் எருசலேமில் உபத்திரவம் வந்தபோது அநேகர் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்களைத் துன்புறுத்தினர், ஆகவே விசுவாசிகள் மற்ற இடங்களுக்கு ஓடினர்.
  • 46:2 சவுல்,தன்னை ஒருவர், "சவுலே! என்று கூபிடுவதைக் கேட்டார். சவுல்! நீ ஏன் என்னைத் துன்பப்படுத்துகிறாய்? " சவுல், "நீர் யார், எஜமானே?" என்று கேட்டார். இயேசு அவரிடம், "நான் இயேசு. நீ என்னை துன்பப்படுத்துகிறாய்_! "
  • 46:4 ஆனால் அனனியா, "ஐயா, இந்த மனிதன எப்படி விசுவாசிகளைத் துன்புறுத்தினான் என்பதை நான் கேள்விப்பட்டிருக்கிறேன்."

சொல் தரவு:

  • Strong's: H1814, H4783, H7291, H7852, G1375, G1376, G1377, G1559, G2347