ta_tw/bible/kt/church.md

7.6 KiB

தேவாலயம், தேவாலயங்கள், சபை

வரையறை:

புதிய ஏற்பாட்டில், "தேவாலயம்" என்ற வார்த்தை, தேவனுடைய வார்த்தையைப் பிரசங்கிப்பதைக் கேட்டு, ஜெபிக்கும்படி தவறாமல் கூடிவந்திருக்கும் இயேசுவின் விசுவாசிகளின் உள்ளூர் குழுவை குறிக்கிறது. "சபை" என்ற வார்த்தை பெரும்பாலும் அனைத்துக் கிறிஸ்தவர்களை குறிக்கிறது.

  • இந்த வார்த்தையானது ஒரு சிறப்பு நோக்கத்திற்காக ஒன்றுகூடி வரும் "வெளியே அழைக்கப்பட்டவர்களின்" அல்லது சபை கூட்டத்தை குறிக்கிறது.
  • கிறிஸ்துவின் முழு சரீரத்திலும் உள்ள எல்லா விசுவாசிகளையும் குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகையில், சில பைபிள் மொழிபெயர்ப்புகள் உள்ளூர் சபையிலிருந்து அதை வேறுபடுத்துவதற்காக முதல் எழுத்தை ("சபை") பெரிய எழுத்தில் குறிப்பிடுகின்றன.
  • பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் உள்ள விசுவாசிகள் யாரோ ஒருவர் வீட்டில் சந்திப்பார்கள். இந்த உள்ளூர் சபைகளுக்கு "எபேசு சபை" போன்ற நகரத்தின் பெயர் கொடுக்கப்பட்டது.
  • வேதாகமத்தில் "தேவாலயம்" என்பது ஒரு கட்டிடத்தைக் குறிக்கவில்லை.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "தேவாலயம்" என்ற வார்த்தை "ஒன்றிணைத்தல்" அல்லது "கூட்டம்" அல்லது "சபை" அல்லது "ஒன்றாகச் சந்திப்பவர்கள்" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • இந்த வார்த்தை மொழிபெயர்க்க பயன்படுத்தப்படும் வார்த்தை அல்லது சொற்றொடரை கூட ஒரு சிறிய குழுவைமட்டுமல்ல, அனைத்து விசுவாசிகள் குறிக்க முடியும்.
  • "தேவாலயத்தின்" மொழிபெயர்ப்பு ஒரு கட்டடத்தைக் குறிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • பழைய ஏற்பாட்டில் "சபை" என மொழிபெயர்க்க பயன்படுத்தப்படும் வார்த்தை கூட இந்த வார்த்தையை மொழிபெயர்க்க பயன்படுத்தப்படுகிறது.
  • ஒரு உள்ளூர் அல்லது தேசிய வேதாகம மொழிபெயர்ப்பில் இது எவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் கவனியுங்கள். (பார்க்கவும்: தெரியாதவைகளை எப்படி மொழிபெயர்ப்பது.)

(மேலும் காண்க: கூடுகை, நம்பிக்கை, கிறிஸ்தவன்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 43:12 சுமார் 3000 பேர் பேதுரு சொன்னதை நம்பி இயேசுவின் சீஷர்களாகினர். அவர்கள் ஞானஸ்நானம் பெற்று எருசலேமில் உள்ள சபையின் அங்கமாக மாறினார்கள்.
  • 46:9 அந்தியோகியாவில் உள்ள பெரும்பாலோர் யூதர்கள் அல்ல, ஆனால் முதன்முறையாக அவர்களில் பலர் விசுவாசிகளாக ஆனார்கள். பர்னபாவும் சவுலும் இந்த புதிய விசுவாசிகள் இயேசுவைப் பற்றி கற்பிக்கவும், சபையை பலப்படுத்தவும் அங்கு சென்றார்கள்.
  • 46:10 எனவே அந்தியோக்கியாவில் உள்ள சபை பர்னபாவுக்காகவும் சவுலுக்காகவும் ஜெபம்பண்ணி, அவர்கள் மீது கைகளை வைத்தார்கள். அநேக இடங்களில் இயேசுவின் நற்செய்தியைப் பிரசங்கிக்கும்படி அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.
  • 47:13 இயேசுவின் நற்செய்தி பரவியது, மற்றும் சபையானது வளர்ந்து கொண்டே இருந்தது.
  • 50:1 கிட்டத்தட்ட 2000 வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதும் அதிகமானோர் இயேசு மேசியாவைப் பற்றிய நற்செய்தியைக் கேட்டுக்கொண்டிருகிறார்கள். சபை பெருகி வருகிறது.

சொல் தரவு:

  • Strong's: G1577