ta_tw/bible/names/elisha.md

2.2 KiB

எலிசா

உண்மைகள்:

இஸ்ரவேலின் பல ராஜாக்களின் ஆட்சிக் காலத்தில் எலிசா இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார்: ஆகாப், அகசியா, யோராம், யெகூ, யோவாகாஸ், மற்றும் யோவாஸ்.

  • தீர்க்கதரிசியாக எலிசாவை அபிஷேகம் செய்யும்படி எலியா தீர்க்கதரிசிக்கு தேவன் சொன்னார்.
  • எலியா அக்கினி இரத்தின்மூலம் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​எலிசா இஸ்ரவேலின் ராஜாக்களுக்கு தேவனுடைய தீர்க்கதரிசியாக ஆனார்.
  • எலிசா பல அற்புதங்களைச் செய்தார்; சிரியாவிலிருந்த குஷ்டரோகியாகிய ஒரு மனிதனைக் குணமாக்கினார், சூனேமில் இருந்து ஒரு பெண்ணின் மரித்துப்போன மகனை உயிரோடெழுப்பினார்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: எலியா, நாகமான், தீர்க்கதரிசி)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H477