ta_tw/bible/names/elijah.md

6.4 KiB

எலியா

உண்மைகள்:

எலியா, ஆண்டவரின் மிக முக்கியமான தீர்க்கதரிசிகளில் ஒருவராக இருந்தார். இஸ்ரவேல் மற்றும் யூதாவின் பல அரசர்களின் ஆட்சிக் காலத்தில் குறிப்பாக ஆகாபின் காலத்தில் எலியா தீர்க்கதரிசனம் உரைத்தார்.

  • இறந்தவரை உயிரோடு எழுப்புவது உட்பட, எலியாவின் மூலம் தேவன் பல அற்புதங்களை செய்தார்.
  • பொய் கடவுளாகிய பாகாலை வணங்கியதற்காக எலியா ராஜாவாகிய ஆகாபைக் கடிந்து கொண்டார்.
  • யெகோவாவே ஒரே மெய்யான தேவன் என்று நிரூபிக்க ஒரு சோதனைக்கு அவர் பாகால் தீர்க்கதரிசிகளுக்கு சவால் செய்தார்.
  • எலியாவின் இறுதி நாட்களில், ​​அவர் உயிரோடு இருக்கும்போதே தேவன் அவரை அற்புதமாக பரலோகத்திற்கு அழைத்துச் சென்றார்.
  • நூற்றுக்கணக்கான ஆண்டுகள் கழித்து, எலியாவும், மோசேவுடன் சேர்ந்து இயேசுவுக்கு ஒரு மலையில் தோன்றினர். அவர்கள் எருசலேமில இயேசுவின் பாடுகள் மற்றும்மரணத்தைப் பற்றி பேசினார்கள்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்க: அதிசயம், தீர்க்கதரிசி, யெகோவா )

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 19:2 எலியா, ஆகாப் இஸ்ரேல் மீது ராஜா வாக இருந்தபோது தீர்க்கதரிசியாக இருந்தார்.
  • 19:2 __ எலியா __ ஆகாபியிடம், "நான் சொல்லும் வரைக்கும் இஸ்ரவேல் ராஜ்யத்தில் மழையோ பனியோ பெய்யாது என்று கூறினார்."
  • 19:3 தேவன், அவரை கொல்ல விரும்பிய ஆகாபிலிருந்து தப்பிக்க வனாந்தரத்தில் ஒரு நீரோடைக்கு செல்லும்படி __ எலியாவிடம் சொன்னார். ஒவ்வொரு காலையிலும் மாலையில் பறவைகள் அவருக்கு அப்பமும் இறைச்சியும் கொண்டுவரும்.
  • __19:4__ஆனால் அவர்கள் எலியாவை பராமரித்துக் கொண்டார்கள், தேவன் அவர்களுக்கு தேவைகளை சந்தித்ததினால், அவர்களுக்கு மாவும் எண்ணெயையும் குறையவில்லை.
  • 19:5 மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, தேவன் மீண்டும் மழையை பெய்யச் செய்யப்போகிறபடியால் ஆகாபோடு பேசுவதற்காக இஸ்ரவேலின் இராஜ்யத்துக்குத் திரும்பவும், __ எலியாவிடம் சொன்னார்,.
  • 19:7 பின்னர் __ எலியா பாகாலின் தீர்க்கதரிசிகளிடம், " ஒரு காளையைக் கொன்று பலிக்காக அதை ஆயத்தப்படுத்துங்கள், ஆனால் அதன் மீது நெருப்புப் போடவேண்டாம்” என்று கூறினார்.
  • __19:12_பின்னர் __ எலியா, "பாகாலின் தீர்க்கதரிசிகளில் யாரையும் தப்பிக்க விடாதே!" என்று கூறினார்.
  • 36:3 பிறகு மோசேயும் தீர்க்கதரிசியாகிய எலியாவும் காணப்பட்டார்கள். இந்த மனிதர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தார்கள். சீக்கிரத்தில் எருசலேமில் நடக்கவிருந்த அவருடைய மரணத்தைப்பற்றி அவர்கள் இயேசுவிடம் பேசினார்கள்.

சொல் தரவு:

  • Strong's: H452, G2243