ta_tw/bible/kt/yahweh.md

12 KiB

யாவே

உண்மைகள்:

“யாவே” என்ற சொல்லானது, தேவன் எரிகிற முட்செடியில் மோசேயுடன் பேசும்போது அவர் வெளிப்படுத்திய தேவனுடைய தனிப்பட்ட பெயராகும்.

  • யாவே” என்ற பெயர், “இருக்கிறவர்” அல்லது “வெளிப்பட்டவர்” என்னும் அர்த்தமுடைய வார்த்தையிலிருந்து வந்ததாகும்.
  • “யாவே”யின் பொருத்தமான அர்த்தமானது, “அவர் இருக்கிறார்” அல்லது “இருக்கிறேன்” அல்லது “இருக்கச் செய்கிறவர்” என்பவைகளை உள்ளடக்குகிறது.
  • தேவன் எப்பொழுதும் வாழ்ந்தார் என்றும் இனி என்றென்றும் வாழ்வார் என்றும் இந்தப் பெயர் வெளிப்படுத்துகிறது. மேலும் இது அவர் எப்பொழுதும் இருக்கிறவர் என்று அர்த்தம் ஆகும்.
  • பாரம்பரியத்தை அடிப்படையாகக்கொண்டு, சில வேதாகம மொழிபெயர்ப்புகள் “யாவே” என்னும் பெயரைக் குறிக்க“ஆண்டவர்” அல்லது “கர்த்தர்” என்ற பதத்தைப் பயன்படுத்துகின்றன. யூதர்கள் “யாவே” என்ற பெயரைத் தவறாக உச்ச்சரித்துவிடுவோமோ என்ற பயத்தினால், “யாவே” என்ற வார்த்தை வருகின்ற இடங்களில் “கர்த்தர்” என்று சொல்லத்தொடங்கினர் என்று வரலாற்று அடிப்படையிலான இந்த உண்மையிலிருந்து வந்த இந்த பாரம்பரியம் கூறுகிறது. நவீனகால வேதாகமங்களில் தேவனுடைய பெயரைக் கனப்படுத்துவதற்காகவும், “கடவுள்” என்ற வித்தியாசமான எபிரேய வார்த்தையை வேறுபடுத்திக் காண்பிப்பதற்காகவும் “கர்த்தர்” என்ற வார்த்தையை பெரிய எழுத்துக்களில் எழுதப்படுகிறது.
  • ULB மற்றும் UDB நூல்கள் எப்பொழுதும் இந்த வார்த்தையை எபிரேய பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் எழுத்தின்படி உள்ளதுபோலவே “யாவே” என்று மொழிபெயர்க்கப்படுகிறது.
  • “யாவே” என்ற பதம் புதிய ஏற்பாட்டின் மூலப் பிரதிகளில் காணப்படுவதில்லை. மேலும் பழைய ஏற்பாட்டிலிருந்து மேற்கோள் காட்டும்போது அதற்கு “கர்த்தர்” என்ற வார்த்தையின் கிரேக்க வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது.
  • பழைய ஏற்பாட்டில், தேவன் தம்மைப்பற்றிப் பேசும்போது, அவர் பிரதிப் பெயர்ச்சொல்லுக்குப் பதிலாக தனது பெயரையே அடிக்கடி பயன்படுத்துகிறார்.
  • “நான்” அல்லது “எனக்கு” என்ற பிரதிப்பெயர்ச்சொல்லை இணைத்து, பேசுபவர் தேவன் தான் என்பதை வாசிப்பவர்களுக்குப் புரியவைப்பதற்காக ULB குறிக்கிறது.

மொழிபெயர்புக்கான சிபாரிசுகள்:

  • “யாவே” என்பதை “நான்” அல்லது “வாழ்கிறவர்”” அல்லது “இருக்கிறவர்” உயிரோடிருக்கிறவர்” என்று பொருள்படும் ஒரு வார்த்தையால் அல்லது சொற்றோடரால் “யாவே” என்பதை மொழிபெயர்க்கலாம்.
  • “யாவே” என்பது எப்படி உச்சரிக்கப்படுகிறதோ அதே போலவே இந்தப் பதம் எழுதப்படுகிறது.
  • சில சபை ஸ்தாபனங்கள் “யாவே” என்ற பதத்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக பாரம்பரியம் வழங்கிய “கர்த்தர்” என்ற பதத்தைப் பயன்படுத்துகின்றன. “கர்த்தர்” என்பதன் உச்சரிப்பைப்போலவே இருக்கிறபடியால் சத்தமாக வாசிக்கும்போது இது குழப்பமாக இருக்கலாம். இது கருத்தில்கொள்ள வேண்டிய முக்கியமான காரியமாகும். சில மொழிகள், “கர்த்தர்” (யாவே) என்னும் பெயரை “ஆண்டவர்” என்ற பட்டத்திலிருந்து வித்தியாசப்படுத்தும் பின்சேர்க்கை அல்லது மற்ற இலக்கணக் குறியீடுகளைக் கொண்டிருக்கலாம்.
  • பிரதிகளில் உள்ளதுபோலவே யாவே என்னும் பெயரை பாதுகாப்பது சிறந்ததாகும். ஆனால் சில மொழிபெயர்ப்புகள் வரிகளை இயற்கையானதாகவும் தெளிவானதாகவும் ஆக்குவதற்கு சில இடங்களில் பிரதிப் பெயர்ச்சொல்லை மட்டுமே பயன்படுத்த முடிவு செய்யலாம்.
  • “யாவே கூறுவது இது தான்” என்பது போன்றவற்றுடன் மேற்கோளை அறிமுகப்படுத்தவும்.

(மொழிபெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்கலாம்

(மேலும் பார்க்க: தேவன், ஆண்டவர், கர்த்தர், மோசே, வெளிப்படுத்து)

வேதாமக் குறிப்புகள்:

வேதாகம கதைகளிலிருந்து உதாரணங்கள்

  • 9:14 தேவன், “நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று சொன்னார். “இருக்கிறேன் என்பவர் என்னை உன்னிடத்திற்கு அனுப்பியிருக்கிறார்” என்று அவர்களுக்குக் கூறு. மேலும், “ ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்னும் உன்னுடைய முற்பிதாக்களின் தேவனாகிய நான் யாவே” என்றும் அவர்களுக்குச் சொல். இதுவே என்றென்றைக்கும் எனது பெயர் ஆகும்.
  • 13:4 பின்பு தேவன் அவர்க்களுக்கு ஒரு உடன்படிக்கையைக் கொடுத்து, “நான் யாவே, உன்னை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்த உன் தேவன்” என்று சொன்னார். மற்ற தெய்வங்களை ஆராதிக்காதே.
  • 13:5 “விக்கிரகங்களை உருவாக்க வேண்டாம் அல்லது அவைகளை ஆராதிக்காதே. ஏனென்றால் நான் யாவே, எரிச்சலுள்ள தேவன்”.
  • 16:1 இஸ்ரவேல் மக்கள் யாவே என்னும் உண்மையான தேவனுக்குப் பதிலாக கானானிய தெய்வங்களை ஆராதிக்கத் தொடங்கினார்கள்.
  • 19:10 பின்பு எலியா, “ஓ, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவனாகிய யாவே, நீரே இஸ்ரவேலின் தேவன் என்றும், நான் உமது ஊழியக்காரன் என்றும் இன்று எங்களுக்குக் காண்பியும்” என்று ஜெபித்தான்.

சொல் தரவு:

  • Strong's: H3050, H3068, H3069