ta_tw/bible/names/moses.md

4.9 KiB

மோசே

உண்மைகள்:

40 வருடங்களுக்கு மேலாக இஸ்ரவேல் ஜனங்களின் ஒரு தீர்க்கதரிசியும் தலைவருமாக மோசே இருந்தார்.

  • மோசே ஒரு குழந்தையாக இருந்தபோது, ​​மோசேயின் பெற்றோர் அவரை எகிப்திய பார்வோனிடமிருந்து மறைக்க நைல் நதியின் நாணல்களில் ஒரு கூடையிலே வைத்தார்கள். அங்கே மோசேயின் சகோதரி மிரியாம் அவரைக் கண்காணித்தார். பார்வோன் மகள் அவரை கண்டுபிடித்து அவரை தன் மகனாக வளர்க்க அரண்மனைக்கு அழைத்து வந்தாள்.

இஸ்ரவேலர்களை எகிப்தில் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்களை வழிநடத்தும்படி தேவன் மோசேயைத் தேர்ந்தெடுத்தார்.

  • இஸ்ரவேலர் எகிப்திலிருந்து தப்பித்து, பாலைவனத்தில் அலைந்து திரிந்தபின், தேவன் மோசேக்கு இரண்டு கற்பலகைகளைக் கொடுத்தார்.
  • அவருடைய வாழ்நாளின் முடிவில், வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் மோசே பார்த்தார், ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அதைப் பெற முடியவில்லை.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: மிரியாம், வாக்குபண்ணப்பட்ட நிலம், பத்து கட்டளைகள்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 9:12 ஒருநாள் மோசே தனது மந்தையை மேய்த்துக்கொண்டிருந்தபோது, ஒரு முட்செடி எரிந்துகொண்டிருப்பதைக் கண்டார்.
  • 12:5 மோசே இஸ்ரவேலர்டம், "பயப்படுவதை நிறுத்துங்கள்! இன்று தேவன் உங்களுக்காக போராடுவார், உங்களை காப்பாற்றுவார். "
  • 12:7 தேவன், மோசேயிடம் கடல் மீது தனது கையை உயர்த்தி தண்ணீரைப் பிரிப்பதற்காக சொன்னார்.
  • 12:12 எகிப்தியர்கள் இறந்துவிட்டதாக இஸ்ரவேலர் கண்டபோது, ​​அவர்கள் தேவன்மீது நம்பிக்கை வைத்தனர், மோசேதேவனின் தீர்க்கதரிசியாக இருந்தார் என்று நம்பினர்.
  • 13:7 பின்னர் தேவன் இந்த இரண்டு கட்டளைகளை இரண்டு கல்பலகைகளின் மீது எழுதி, அவற்றை மோசேயிடம் க்கு கொடுத்தார்.

சொல் தரவு:

  • Strong's: H4872, H4873, G3475