ta_tw/bible/kt/god.md

11 KiB

தேவன்

உண்மைகள்:

வேதாகமத்தில், "தேவன்" என்ற வார்த்தை ஒன்றுமில்லாமையிலிருந்து பிரபஞ்சத்தை உருவாக்கிய நித்திய ஜீவனை குறிக்கிறது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என தேவன் வெளிப்படுகிறார். தேவனுடைய தனிப்பட்ட பெயர் "யெகோவா".

  • தேவன் எப்போதும் இருக்கிறார்; அவர் இதற்கு முன்னும் இருந்தார், அவர் என்றென்றும் இருப்பார்.
  • அவர் ஒரே மெய்க் கடவுள், பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றிற்கும் அதிகாரம் உள்ளவர்.
  • தேவன் பரிபூரணமானவர், முடிவில்லாத ஞானமுள்ளவர், பரிசுத்தர், பாவமற்றவர், நீதியுள்ளவர், இரக்கமுள்ளவர், அன்புள்ளவர்.
  • அவர் தம் வாக்குறுதிகளை எப்போதும் நிறைவேற்றும் உடன்படிக்கை காக்கும் தேவன்.
  • தேவனை வணங்குவதற்காக மக்கள் படைக்கப்பட்டார்கள், அவரை மட்டுமே வணங்க வேண்டும்.
  • தேவன் தமது பெயரை "கர்த்தர்" என்று வெளிப்படுத்தினார், அதாவது "அவர்" அல்லது "நானே" அல்லது "எப்பொழுதும் இருக்கின்றவர்" என்று அர்த்தம்.
  • தவறான "தெய்வங்கள்" பற்றி வேதாகமம் கற்பிக்கிறது, இது மக்கள் தவறாக வழிபடும் உயிரற்ற சிலைகள் ஆகும்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "தேவன்" என்பதை மொழிபெயர்க்கும் வழிகள், "தெய்வம்" அல்லது "படைப்பாளர்" அல்லது "உயர்ந்தவை" ஆகியவை அடங்கும்.
  • "தேவன்"என்பதை மொழிபெயர்ப்பதற்கான மற்ற வழிகள் "மிகச் சிறந்த படைப்பாளர்" அல்லது "எல்லையற்ற சர்வலோக பேரரசர்" அல்லது "நித்திய உயர்ந்தவர்" ஆக இருக்கலாம்.
  • ஒரு உள்ளூர் அல்லது தேசிய மொழியில் தேவன் எவ்வாறு குறிப்பிடப்படுகிறார் என்பதை கவனியுங்கள். ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டுள்ள மொழியில் "தேவன்" என்ற வார்த்தையும் ஏற்கனவே இருக்கலாம். அப்படியானால், மேலே குறிப்பிட்டபடி, இந்த வார்த்தை உண்மையான தேவனின் பண்புகளை பொருத்துகிறது என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம்.
  • பல மொழிகளும் ஒரு உண்மையான தேவனுக்கு வார்த்தையின் முதல் எழுத்து ஒரு பொய்யான கடவுளின் வார்த்தையிலிருந்து வேறுபடுத்தி காட்டுகின்றன.
  • இந்த வேறுபாட்டை உருவாக்க மற்றொரு வழி, "தேவன்" மற்றும் "கடவுள்" ஆகியவற்றிற்கான வெவ்வேறு சொற்கள் பயன்படுத்த வேண்டும்.
  • "நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்" என்ற சொற்றொடர், "நான், தேவன், இந்த மக்களை ஆளுவேன், அவர்கள் என்னை வணங்குவார்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

மேலும் காண்க: உருவாக்கு, பொய்யான தெய்வம், பிதாவாகிய தேவன், பரிசுத்த ஆவியானவர், பொய் கடவுள், தேவனின் மகன், யெகோவா)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 1:1 தேவன் ஆறு நாட்களில் பிரபஞ்சத்தையும் அதன் எல்லாவற்றையும் உருவாக்கினார்.
  • 1:15 தேவன் ஆணையும் பெண்ணையும் தனது சொந்த தோற்றத்தில் உருவாக்கினார்.
  • 5:3"நான் தேவன் சர்வ வல்லவர். நான் உன்னோடே உடன்படிக்கைபண்ணுவேன் என்றான்.
  • 9:14 தேவன் "நான் இருக்கிறவராகவே இருக்கிறேன்” என்று சொன்னார். 'இருக்கிறேன் என்பவர் உங்களிடம் என்னை அனுப்பியுள்ளார் என்று அவர்களிடம் சொல். மேலும் அவர்களிடம், நான் உன் பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களின், தேவன். நான் கர்த்தர். என்றென்றும் இது என் பெயர். "
  • 10:2 இந்த வாதைகளால், பார்வோனைக் காட்டிலும், எகிப்தின் எல்லா கடவுளர்களிலிருந்தும் அவர் பெரிதும் சக்திவாய்ந்தவர் என்பதை தேவன் காட்டினார்.
  • 16:1 இஸ்ரவேல் புத்திரர் தேவனுக்குப் பதிலாக கானானிய தெய்வங்களை வணங்கத் தொடங்கினர்
  • 22:7 நீயோ, என் மகனே, உன்னதமான தேவனுடைய தீர்க்கதரிசியாக இருப்பாய், மேசியாவை வரவேற்க மக்களை ஆயத்தப்படுத்துவாய்.
  • 24:9 ஒரே ஒரு தேவன் மட்டுமே இருக்கிறார். ஆனால் யோவான் இயேசுவுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்போது பிதாவாகிய தேவன் பேசுவதைக் கேட்டான். மேலும் குமாரனாகிய இயேசுவையும் பரிசுத்த ஆவியானவரையும் கண்டான்.
  • 25:7 உன் ஆண்டவராகிய தேவனை மட்டுமே ஆராதித்து, அவரையே செவிப்பாயாக.
  • 28:1 "ஒரே ஒருவர் மட்டுமே நல்லவராக இருக்கிறார், அவர் தேவன்"
  • 49:9 ஆனால் தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனாகிய இயேசுவை விசுவாசிக்கிற எவனும் கெட்டுப்போகாமல் தன் பாவங்களுக்காக தண்டிக்கப்படமாட்டான், ஆனால் அவன் தேவனோடு என்றென்றும் இருப்பான்.
  • 50:16 ஆனால் ஒரு நாள் தேவன் பரிபூரணமான ஒரு புதிய வானத்தையும் புதிய பூமியையும் உருவாக்குவார்.

சொல் தரவு:

  • Strong's: H136, H305, H410, H426, H430, H433, H2486, H2623, H3068, H3069, H3863, H4136, H6697, G112, G516, G932, G935, G1096, G1140, G2098, G2124, G2128, G2150, G2152, G2153, G2299, G2304, G2305, G2312, G2313, G2314, G2315, G2316, G2317, G2318, G2319, G2320, G3361, G3785, G4151, G5207, G5377, G5463, G5537, G5538