ta_tw/bible/kt/godthefather.md

7.2 KiB

பிதாவாகிய தேவன், பரலோகத் தகப்பன், தந்தை

உண்மைகள்:

"பிதாவாகிய தேவன்" மற்றும் "பரலோகத் தகப்பன்" ஆகிய சொற்கள் யெகோவாவை ஒரே உண்மையான கடவுளாகக் குறிக்கின்றன. அதே அர்த்தத்தோடு இன்னுமொரு வார்த்தை "பிதா" என்பது இயேசு அடிக்கடி குறிப்பிடுகையில் அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

  • பிதாவாகிய தேவனும் குமாரனாகிய தேவனும் பரிசுத்த ஆவியான தேவனும் தேவனாக வெளிப்படுகிறார்.. ஒவ்வொருவரும் முழுமையாக தேவன், மற்றும் அவர்கள் ஒரே கடவுளாக இருக்கிறார்.. மனிதர்கள் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத ஒரு இரகசியம் இது.
  • பிதாவாகிய தேவன் குமாரனை (இயேசு) உலகிற்கு அனுப்பினார். பரிசுத்த ஆவியானவரை தம் மக்களுக்கு அனுப்புகிறார்.
  • குமாரனாகிய தேவனை விசுவாசிக்கும் நபர் பிதாவாகிய தேவனின் பிள்ளையாக மாறுகிறான், மேலும் பரிசுத்த ஆவியானவராகிய தேவன் அந்த நபருக்குள் வசிக்கிறார். மனிதர்கள் முழுமையாக புரிந்து கொள்ள முடியாத இன்னொரு இரகசியம் இதுதான்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "பிதாவாகிய தேவன்" என்ற சொற்றொடரை மொழிபெயர்ப்பதில், "தந்தையை" மொழிபெயர்ப்பது சிறந்தது, அந்த வார்த்தை மனித இயல்புக்கு அப்பாற்பட்ட ஒரு மனித தந்தையரை குறிக்க பயன்படுத்தும் வார்த்தை.
  • "பரலோகத் தகப்பன்" என்ற வார்த்தை "பரலோகத்தில் வசிக்கும் தகப்பன்" அல்லது "பரலோகத்தில் வசிக்கும் பிதாவாகிய தகப்பன் " அல்லது "பரலோகத்திலிருந்து நம்முடைய பிதாவாகிய தேவன்" என்று மொழிபெயர்க்கலாம்.
  • பொதுவாக "தந்தை" அது கடவுளை குறிக்கும் போது கொட்டை எழுத்துக்களில் இருக்கிறது.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: மூதாதையர், தேவன், பரலோகம், பரிசுத்த ஆவியானவர், இயேசு, தேவனுடைய குமாரன்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 24:9 ஒரே ஒரு தேவன் மட்டுமே இருக்கிறார். ஆனால் யோவான், இயேசு ஞானஸ்நானம் பெற்ற போது "பிதாவாகிய தேவன்" பேசுவதைக் கேட்டான், குமாரனையும் பரிசுத்த ஆவியையும் கண்டார்.
  • 29:9 அப்பொழுது இயேசு, "உன் இதயத்தில் சகோதரனை நீ மன்னிக்காவிட்டால், உங்கள் ஒவ்வொருவருக்கும் என் பரலோக தந்தை செய்யும் காரியம் இதுதான். என்று சொன்னார்.!
  • 37:9 பிறகு இயேசு வானத்தை நோக்கிப் பார்த்து, "பிதாவே, என்னைக் கேட்டதற்கு நன்றி."
  • 40:7 இயேசு சத்தமிட்டு, "இது முடிந்தது! __பிதாவே, நான் என் ஆவி உம் கையில் கொடுக்கிறேன்."
  • 42:10 "நீங்கள் போய், நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் கீழ்ப்படியும்படிக்கு, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, சகல ஜனங்களையும் சீஷராக்குங்கள் என்றார்.
  • 43:8 "இயேசு இப்போது_பிதாவின்_ வலது பாரிசத்தில் உயர்த்தப்பட்டிருக்கிறார்.”
  • 50:10 "அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவாகிய தேவனின்__ பேரரசில் சூரியன் போல் ஒளிவீசுவர்."

சொல் தரவு:

  • Strong's: H1, H2, G3962