ta_tw/bible/kt/holyspirit.md

8.3 KiB
Raw Permalink Blame History

பரிசுத்த ஆவியானவர், தேவனின் ஆவியானவர், கர்த்தரின் ஆவியானவர் , ஆவியானவர்

உண்மைகள்:

இந்த வார்த்தைகள் அனைத்தும் தேவனாகிய பரிசுத்த ஆவியானவரைக் குறிக்கின்றன. ஒரு உண்மையான தேவன் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் என நித்தியமாக இருக்கிறார்.

  • பரிசுத்த ஆவியானவர் "ஆவியானவர்" என்றும் "கர்த்தருடைய ஆவியானவர்" என்றும் "சத்திய ஆவியானவர்" என்றும் குறிப்பிடப்படுகிறார்.
  • பரிசுத்த ஆவியானவர் தேவனாக இருப்பதால், அவர் முழுமையான புனிதமானவர், முழுமையான தூய்மையானவர், ஒழுக்க பூர்வமானவர்.
  • பிதாவுடனும் குமாரனுடனும் சேர்ந்து, பரிசுத்த ஆவியானவர் உலகை படைக்கிறார்.
  • தேவனுடைய குமாரனாகிய இயேசு, பரலோகத்திற்குத் திரும்பியபோது, ​​தேவன் அவர்களை வழிநடத்துகிறவர்களுக்கு பரிசுத்த ஆவியானவரை அனுப்பினார், அவர்களுக்குக் கற்பித்து, ஆறுதல்படுத்தினார், தேவனுடைய சித்தத்தைச் செய்ய அவர்களுக்கு உதவுகிறார்.
  • பரிசுத்த ஆவியானவர் இயேசுவை வழிநடத்தி, இயேசுவை நம்புகிறவர்களை வழிநடத்துகிறார்.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • "பரிசுத்த" மற்றும் "ஆவி" என மொழிபெயர்க்க பயன்படுத்தப்படும் வார்த்தைகளோடு இந்த வார்த்தை வெறுமனே மொழிபெயர்க்கப்படலாம்.
  • இந்த வார்த்தையை மொழிபெயர்க்க வழிகள் "தூய ஆவி" அல்லது "பரிசுத்த ஆவியானவர்" அல்லது "தேவனுடைய ஆவியானவர்" ஆகியவை அடங்கும்.

(மேலும் காண்க: பரிசுத்தம், ஆவி, தேவன், கர்த்தர், பிதாவாகிய தேவன், தேவனுடைய குமாரன், வரம்)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 1:1 ஆனால் தேவனுடைய ஆவி தண்ணீருக்கு மேலாக இருந்தார்.
  • 24:8 இயேசு ஞானஸ்நானம் பெற்ற பின்னர் தண்ணீரிலிருந்து வெளியே வந்தபோது, __தேவ ஆவியானவர்__ புறாவைப்போல காணப்பட்டு அவர்மேல் வந்து அமர்ந்தார்.
  • 26:1 சாத்தானின் சோதனைகள் முடிந்த பிறகு, இயேசு வாழ்ந்த இடமாகிய கலிலேயாவின் பகுதிக்கு , பரிசுத்த ஆவியானவர் பெலத்துடன் திரும்பி வந்தார்.
  • 26:3 இயேசு வாசித்தபோது, "ஏழைகளுக்கு நற்செய்தியைப் பிரகடனம் செய்வதற்கும், சிறைப்பட்டவர்களுக்கு சுதந்திரம் கொடுப்பதற்கும், பார்வையற்றோர் பார்வை மீட்டு, ஒடுக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக தேவன் எனக்கு பரிசுத்த ஆவியைக் கொடுத்திருக்கிறார்."
  • 42:10 "ஆகையால், பிதா, குமாரன், மற்றும் பரிசுத்த ஆவியின் பெயரால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பதன் மூலம் எல்லா மக்களையும் சீஷராக்குங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்தையும் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்பியுங்கள்" என்றார்.
  • 43:3 அவர்கள் அனைவரும் பரிசுத்தஆவியால் நிரப்பப்பட்டனர் மற்றும் அவர்கள் அந்நிய பாஷைகளில் பேச ஆரம்பித்தார்கள்.
  • 43:8 "இயேசு செய்யப்போவதாக வாக்குத்தத்தம் செய்தபடியே, இயேசு பரிசுத்தஆவியானவரை அனுப்பினார். பரிசுத்தஆவி நீங்கள் இப்போது பார்க்கும் காரியங்களைக் நேரிடும்படிச் செய்தார். "
  • 43:11 பேதுரு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: உங்களில் ஒவ்வொருவனும் மனந்திரும்பி, இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றால், தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். பின்னர் அவர் பரிசுத்த ஆவியின் வரத்தை உங்களுக்கு கொடுப்பார். "
  • 45:1 அவர் (ஸ்தேவான்) ஒரு நல்ல நற்பெயரைக் கொண்டிருந்தார்; மேலும் அவர் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டிருந்தார்.

சொல் தரவு:

  • Strong's: H3068, H6944, H7307, G40, G4151