ta_tw/bible/other/creation.md

6.3 KiB

உருவாக்கு, உருவாக்குதல், உருவாக்கியது, உருவாக்கம், சிருஷ்டிகர்

வரையறை:

"உருவாக்கு" என்ற சொல்லானது ஏதாவது ஒன்றை உருவாக்க அல்லது ஏதேனும் ஒரு காரணத்தை உருவாக்குவது ஆகும். உருவாக்கப்பட்டவை எதுவோ அது "படைப்பு" என்று அழைக்கப்படுகின்றன. தேவன் "சிருஷ்டிகர்" என்று அழைக்கப்படுகிறார், ஏனென்றால் அண்டசராசரம் முழுவதிலும் உள்ள அனைத்தையும் அவர் உருவாக்கியிருக்கிறார்.

  • தேவன் இந்த உலகத்தை உருவாக்கும்படி குறிப்பிடுவதற்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தும்போது, ​​அவர் அதை வெற்றிடத்திலிருந்து உருவாக்கினார் என்பதாகும்.
  • மனிதர்கள் "உருவாக்கும்" போது, ​​அது அவர்கள் ஏற்கனவே இருந்த காரியங்களை வெளியே கொண்டுவருவதாகும்.

சில சமயம் "உருவாக்க" என்பது சமாதானத்தை உருவாக்குவது அல்லது ஒருவருக்கு ஒரு சுத்த இதயத்தை உருவாக்குவது போன்ற சுருக்கமான விளக்கத்தை விவரிக்க ஒரு உருவக அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது.

  • "படைப்பு" என்ற வார்த்தை, எல்லாவற்றையும் முதன்முதலில் தேவன் படைத்த உலகின் ஆரம்பத்தை குறிக்கலாம். இது தேவன் உருவாக்கிய அனைத்தையும் பொதுவாக குறிக்க பயன்படுத்தலாம். சில நேரங்களில் "படைப்பு" என்ற வார்த்தை உலகில் உள்ள மக்களை மட்டும் குறிப்பாக குறிப்பிடுகிறது.

மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்:

  • இந்த அர்த்தம் தெளிவாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தேவன் "ஒன்றுமில்லாமையிலிருந்து" உலகத்தை படைத்தார் என்று சில மொழிகளில் நேரடியாக சொல்லலாம்.
  • , "உலகத்தின் சிருஷ்டிப்பிலிருந்து என்ற சொற்றொடரின் " அர்த்தம், "தேவன் உலகத்தை படைத்த காலத்திலிருந்து."என்பதாகும்.
  • "படைப்பின் ஆரம்பத்தில்", என்ற சொற்றொடர் "தேவன் ஆரம்ப காலத்தில் உலகத்தை படைத்தபோது" அல்லது "உலகத்தை முதலில் படைத்தபோது" என்று மொழிபெயர்க்கலாம்.
  • "சகல சிருஷ்டிகளுக்கும்" நற்செய்தியைப் பிரசங்கிப்பது என்பது, "பூமியில் உள்ள எல்லா மக்களுக்கும்" நற்செய்தியை பிரசங்கிப்பதாகும்.
  • "படைப்பு அனைத்தும் மகிழ்ந்திருக்கட்டும்" என்பதன் அர்த்தம் "தேவன் படைத்த அனைத்தும் மகிழ்ந்திருக்கட்டும் " என்று அர்த்தம்.
  • சூழலைப் பொறுத்து, "உருவாக்குதல்" என்பது "தயாரிப்பது" அல்லது "காரணமாக அமைவது" அல்லது " ஒன்றுமில்லாமையிலிருந்து உருவாக்குவது" என மொழிபெயர்க்கப்படலாம்.
  • "சிருஷ்டிகர்" என்ற வார்த்தை "எல்லாவற்றையும் படைத்தவர்" அல்லது "முழு உலகத்தையும் படைத்த தேவன்" என்று மொழிபெயர்க்கப்படலாம்.
  • "உங்கள் சிருஷ்டிகர் " போன்ற சொற்றொடர்கள் "உங்களை உருவாக்கிய தேவன்" என்று மொழிபெயர்க்கலாம்.

(மேலும் காண்க: தேவன், நற்செய்தி, உலகம்)

வேதாகமக் குறிப்புகள்:

சொல் தரவு:

  • Strong's: H3335, H4639, H6213, H6385, H7069, G2041, G2602, G2675, G2936, G2937, G2939, G4160, G5480