ta_tw/bible/names/naaman.md

3.4 KiB

நாகமான்

உண்மைகள்:

பழைய ஏற்பாட்டில், நாகமான் அராம் அரசனின் படைத் தளபதியாக இருந்தார்.

நாகமானுக்கு குணப்படுத்த முடியாத தொழுநோய் என்று அழைக்கப்பட்ட தோல் நோய் இருந்தது.

  • நாகமானின் வீட்டிலுள்ள ஒரு யூத அடிமைபெண், அவனைக் குணமாக்க எலிசா தீர்க்கதரிசியிடம் செல்லும்படி சொன்னாள்.
  • யோர்தான் நதியில் ஏழு தடவை மூழ்கும்படி எலிசா நாகமானிடம் சொன்னார். நாகமான் கீழ்ப்படிந்தபோது, ​​தேவன் அவனுடைய நோயைக் குணப்படுத்தினார்.
  • இதன் விளைவாக, நாகமான் ஒரே மெய்க் கடவுளாகிய யெகோவாவை விசுவாசித்தார்.
  • நாகமான் என்ற பெயர் கொண்ட இரண்டு பேர் யாக்கோபின் மகன் பென்யமீனின் சந்ததியினர்.

(மொழிபெயர்ப்பு பரிந்துரைகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்க வேண்டும்

(மேலும் காண்க: அராம், யோர்தான் நதி, தொழுநோய், தீர்க்கதரிசி)

வேதாகமக் குறிப்புகள்:

வேதாகமக் கதைகளிலிருந்து எடுத்துக்காட்டுகள்:

  • 19:14 ஒரு கொடூரமான தோல் நோய் கொண்ட ஒரு எதிரிப்படை தளபதி, நாகமானுக்கு அற்புதம் ஒன்று நடந்தது.
  • 19:15 முதலில் நாகமான் கோபமாக இருந்தது, அது முட்டாள்தனமானதாக தோன்றியதால் அதை செய்யவில்லை. ஆனால் பின்னர் அவர் தனது மனதை மாற்றிக்கொண்டு யோர்தான் நதியில் ஏழு முறை மூழ்கினான்.
  • 26:6 "அவர் (எலிசா) மட்டுமே இஸ்ரேலின் எதிரிகளின் தளபதியாகிய நாகமானின் தோல் நோயை குணப்படுத்தினார்."

சொல் தரவு:

  • Strong's: H5283, G3497