ta_tw/bible/names/aram.md

3.9 KiB

ஆராம், அரேமியர், அரேமியர்கள், அரேமியா

விளக்கம்:

"ஆராம்" பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட இரண்டு பெயர்களாகும். இது கானானின் வடகிழக்கு பகுதியின் பெயர், இங்கு நவீனகால சிரியா அமைந்துள்ளது.

  • ஆராமில் வாழும் மக்களை “அரேமியர்கள்” என்றும் அவர்கள் பேசும் மொழியை “அரேமியா” என்றும் அறியப்படுகின்றனர். இயேசுவும் அவரது காலத்தில் வாழ்ந்த மற்ற யூதர்களும் அரேமிய மொழியை பேசினார்கள்.
  • சேமுவின் மகன்களில் ஒருவனது பெயர் ஆராம். மற்றொரு பெயருடைய ஆராம் ரெபக்காளின் ஒன்றுவிட்ட சகோதரன். ஆராம் என்ற பகுதி ஒருவேளை இந்த இருவரின் பெயரில் அமைந்தாதாக இருக்கலாம்.
  • ஆராம் பிற்காலத்தில் கிரேக்க பெயரில் “சிரியா” என்று அழைக்கப்படுகிறது.
  • “பதான் ஆராம்” என்ற பதம் “ஆராம் சமவெளி” என்று அர்த்தப்படுத்தலாம் இது ஆராம் வட பகுதியில் அமைந்துள்ளது.
  • ஆபிரகாமின் சில உறவினர்கள் ஹரான் என்ற நகரத்தில் வசித்து வந்தார்கள், இது “பதான் ஆராம்” பகுதியில் அமைந்துள்ளது.
  • பழைய ஏற்பாட்டில், சில வேளைகளில் “ஆராம்” மற்றும் “பதான் ஆராம்” இரண்டும் ஒன்றாகவே குறிப்பிடப்படுகிறது.
  • ஆராம் நாகரிம்” என்ற பதம் “ஆராமின் இரண்டு நதிகளை” குறிக்கலாம். " இந்த பகுதி மொசப்பத்தியாமின் வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது மேலும் அது“பதான் ஆராமின்” கிழக்குப்பகுதியில் உள்ளது.

(மொழிபெயர்ப்பு சிபாரிசுகள்: பெயர்களை எப்படி மொழிபெயர்க்கலாம்

(மேலும் பார்க்க: மொசப்பத்திமியா, பதான் ஆராம், ரெபக்காள், சேம், சிரியா)

வேத ஆதாராங்கள்:

சொல் தரவு:

  • Strong's: H758, H763, G689